பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நாயன்மார் கதை

அவர் அவ்வளவு தூரம் வற்புறுத்திச் சொன்னமையால், அந்தக் கோவணத்தைத் தாம் வைத்திருக்கும் கோவணம் முதலியவை இருக்கும் இடத்தில் வைக்காமல், தனியே பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்தார் அமர்நீதியார். சோதனை புரிவதற்காகவே வந்த வேதியர் சிறிது நேரத்தில் மீண்டார். மழை பிடித்துக் கொண்டது. அதில் நனைந்துகொண்டே திருமடத்தை அடைந்தார்.

அவருக்கு வேண்டிய திருவமுதைச் சமைக்கச் செய்து அவருக்காகக் காத்திருந்த அமர்நீதியார் அவரைக் கண்டவுடன் எதிர் சென்று அழைத்துக்கொண்டு மடத்திற்குள் வந்தார்.

"நான் ஒரு கோவணத்தை உம்மிடம் கொடுத்துப் போனது நல்லதாகப் போயிற்று. நீராடியதால் அணிந்திருந்த கோவணம் நனைந்தது. மழை வந்ததனால் தண்டத்திலிருந்த கோவணமும் நனைந்து போயிற்று. நான் கொடுத்த கோவணத்தைக் கொண்டு வாரும்" என்றார்.

நாயனார் உள்ளே சென்று அந்தக் கோவணத்தை வைத்த இடத்தில் பார்த்தார். அதைக் காணவில்லை. அருகில் எங்காவது விழுந்திருக்குமோ என்று பார்த்தார். எங்கும் இல்லை. யாரேனும் எடுத்தாரோ என்று கேட்டார். ஒருவரும் எடுத்ததாகத் தெரியவில்லை. தாம் வைத்திருந்த கோவணக் கட்டுகளிலெல்லாம் தேடினார். வந்திருந்த மாயப் பிரம்மச்சாரி வேண்டுமென்று அதை மறைத்து விட்டபோது அது அவருக்கு எப்படிக் கிடைக்கும்?

எங்கே தேடியும் கோவணம் அகப்படாமல் போகவே அமர்நீதியார் வருந்தினர். "அவர் எத்தனை தூரம் வற்புறுத்திச் சொன்னார்! அதை நான் போக்கிவிட்டேனே!" என்று நைந்தார். அவருக்கு இன்னது செய்வதென்று தோன்றவே இல்லை. திகைத்துப்போய் நின்றார். அவரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/32&oldid=1405455" இலிருந்து மீள்விக்கப்பட்டது