பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமர்நீதி நாயனார்

27

டைய மனைவியாரும் சுற்றத்தாரும் அவருடைய கலக்கத்தை அறிந்து மனம் உளைந்தார்கள். இனிமேல் என்ன செய்வது? புதிய கோவணம் ஒன்றை அடியாருக்குக் கொடுப்பதுதான் இப்போது செய்யக்கூடிய காரியம்" என்று எண்ணி நல்ல கோவணமாக ஒன்றை எடுத்துக் கொண்டு பிரம்மச்சாரி முன் சென்றார்.

"சுவாமி, தேவரீர் தந்த கோவணத்தைப் பத்திரமாகத்தான் வைத்திருந்தேன். ஆனல் இப்போது வைத்த இடத்தில் அதைக் காணவில்லை. வேறு யாரும் அதை எடுக்கவில்லை. அது எப்படி மாயமாக மறைந்ததோ, தெரியவில்லை. இது பெரிய அதிசயமாக இருக்கிறது. இந்தப் பிழையைத் தேவரீர் பொறுத்தருள வேண்டும். இதோ வேறொரு கோவணம் கொண்டு வந்திருக்கிறேன். இது மிகவும் உறுதியானது. கிழித்தது அன்று, நெய்தது. இதைத் தயை செய்து சாத்தியருள வேண்டும். அறியாமல் நேர்ந்த இந்த அபசாரத்தைப் பொறுத்தருள வேண்டும்". என்று அழாக்குறையாக நாயனார் பணிவுடன் கூறி அக்கோவணத்தை நீட்டினார்.

அவ்வந்தணர் கண்கள் சிவந்தன. கோபப் பொறி பறந்தது. "நன்றாக இருக்கிறது உம்முடைய பேச்சு! கொடுத்துப் பல நாள் கழிந்தாலும் கெட்டுப்போயிற்று என்று சொல்லலாம். காலையில் கொடுத்தேன். நீராடி விட்டு இப்போது வந்து சேர்கிறேன். அதை எடுத்துக் கொண்டு, 'தொலைந்துவிட்டது; இதை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொல்கிறீரே. இதுதான் நீர் செய்யும் தர்மமா? நல்ல கோவணம் தானம் செய்கிறாரென்று ஊரெல்லாம் முரசடிக்கச் செய்கிறீரே என்னுடைய கோவணத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் இந்தத் தந்திரமோ? கிடைத்தற்கரிய என் கோவணத்தை எடுத்துக் கொண்டு உம்முடைய மட்டமான கோவணத்தைத் தருகிறீரே; இதிலும் லாபம் அடிக்கவேண்டுமென்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/33&oldid=1405456" இலிருந்து மீள்விக்கப்பட்டது