பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாயன்மார் கதை

தம்மிடமுள்ள எல்லாப் பொருள்களையும் இட்டும் தட்டு நேர் கில்லாமையைக் கண்ட நாயனர், சுவாமி, இனி என்னிடம் வேறு சொத்து ஒன்றும் இல்ல. அடி யேனும் அடியேன் மனைவியும் மைந்தனும் இந்தத் தட்டில் ஏறலாம் என்று நினைக்கிறேன். அதற்குத் தேவரீர் இசைக் தருள வேண்டும்' என்று பணிந்து வேண்டினர். இனி இவரைச் சோதனை செய்தல் தகாது' என்று எண்ணிய அந்தணர், அவ்வாறே செய்யலாம்" என்று இசைந்தார்.

உடனே மனம் மகிழ்ந்து அப் பெருமானுடைய திருவடியை வணங்கி, அந்தத் தராசை மனேவியோடும் மைந்தளுேடும் வலமாக வந்து, "சிவபெருமானுடைய திரு நீற்றில் உண்மையான அன்பு பிழிையாமல் நாங்கள் இருந் தோம் என்ருல் இது நேரே கிற்க வேண்டும்' என்று சொல்லித் திருநல்லூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பிரானத் தியானித்தார். பஞ்சாட்சர மந்திரத்தை ஒதிய படியே அமர்நீதியார் தம் மனேவியையும் மைந்த&ன்யும் தட்டில் ஏற்றிய பின் தாம் ஏறினர். அதுவரையில் தனக்குச் சமானமான பொருள் எதனையும் பெருமல் தாழ்ந்திருந்தது கோவணம். அப்போது உண்மை அன்ப ராகிய அமர்நீதியாருடைய தொண்டு தனக்குச் சமானமாக நின்றமையால் கோவணம் வைத்திருந்த தட்டு மேல் எழுந்தது. இரண்டு தட்டுகளும் ஒத்து கின்றன.

அருகில் இருந்த கூட்டத்தினர் இந்த அதிசயத்தைக் கண்டு கை தொழுது வணங்கினர். தேவர் பூமழை மொழிந்தனர். அப்போது அருகில் நின்ற வேதியரைக் காணவில்லை; அவர் மறைந்தார்.

வானத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் விடை யின்மேல் எழுந்தருளி வந்து அமர்நீதியாருக்குக் காட்சி கொடுத்தருளின்ை. துலேத் தட்டில் இருந்தபடியே அந்தக் காட்சியைக் கண்டு களித்தார் காயனரும் அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/36&oldid=585530" இலிருந்து மீள்விக்கப்பட்டது