பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்நீதி நாயஞர் 3.1

மனேவியும் மைக்தனும். அந்தத் துலேயே விமானமாக மாற, அம் மூவரும் சிவலோகம் சென்று சிவகணங்களாகி இறைவனுடைய சாமீப்பிய ப த வி ைய ப் பெற்று வாழ்ந்தனர். - -

8. எறிபத்த நாயனர்

கருவூரில் அரச வீதி. பட்டத்து யானே ரோடிவிட்டு வருகிறது. அப்போது திருவிழக் காலம். எங்கும் மக்களின் கூட்டம். வந்து கொண்டிருந்த யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதன்மேல் இருந்த பாகர் இருவர் அதனே அடக்கப் படாத பாடுபட்டனர். கீழே கையிலே குத்துக் கோலுடன் கின்று களிற்றைக் காவல் புரிந்துவரும் பரிக் கோற்காரர்களும் அதை அடக்க முயன்றனர். அவர் களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

மக்கள் அலங்க மலங்க ஓடினர். எங்கும் ஒரே ஆர வாரம். யானே வீதியில் ஒடிக்கொண்டிருந்தது.

அப்போது சிவகாமியாண்டர் வழக்கம்போல் கையில் கூடை நிறைய மலர்களைப் பறித்துக்கொண்டு திருக் கோயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். விடியற் காலையில் எழுந்து கடன்களே முடித்துவிட்டு, நந்திவனம் கென்று பயபக்தியுடன் மலர்களைக் கொய்வார். வாயைக் கட்டிக்கொண்டு அவற்றைப் பறிப்பார். அவற்றின்மேல் தம் மூச்சுக் காற்றுக்கூடப் படாமல் எடுத்து வருவார். பூக் கூடை நிறைந்தாலும் அவர் மனம் கிறைவு பெருது. 'இன்னும் நிறைய மலர் கொய்துகொண்டு செல்ல மூடிய வில்லையே' என்ற எண்ணமே அவருக்கு உண்டாகும். தம் கையில் ஒரு தடி வைத்திருப்பார். அதில் பூக்கூடை யைத் தொங்கவிட்டுக் கொண்டு திருக்கோயிலுக்குச் செல் வார். மலர்களை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு .அணியச் செய்வார். -- .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/37&oldid=585531" இலிருந்து மீள்விக்கப்பட்டது