பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாயன்மார் கதை

ஒவ்வொரு நாளும் காலேயில் கையிலே பூக் கூடையை மாட்டிய கண்டத்துடன் அவர் செல்வதை காணலாம். ஊரில் அவரையும் அவர் பக்தித் திறத்தையும் அறியாதவர் யாரும் இல்லே. -

கருவூர்த் திருக்கோயிலுக்குத் திருவாகிலை என்று தனியே ஒரு பெயரும் உண்டு. அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்குப் பசுபதீசுவரர் என்று திருநாமம். ஆகிலே யுடைய மகாதேவர் என்று அப்பெருமானைச் சிலா சாசனங் கள் குறிக்கின்றன. -

மதங்கொண்ட யானை தெரு வழியே போகும்போது: மக்கள் யாவரும் ஓடினர். சிவகாமியாண்டார் அந்தக் கூட்டத்தின் நடுவே அகப்பட்டுக் கொண்டார். முதியவர் ஆதலினல் அவரால் ஒட முடியவில்லை. அப்போது யானே அவர் கையில் இருந்த பூக்கூடையைத் தன் துதிக்கையால்: பறித்துக் கீழே போட்டுச் சிதைத்தது. அதில் உள்ள மலர் களெல்லாம் கீழே சிதறின. யானே தம்மை ஒன்றும் செய் யாமல் விட்டுவிட்டதே என்று சிவகாமியாண்டார் கின்ேக்க வில் ஆல. இறைவனுடைய பூசைக்குரிய மலர்களேயெல்லாம். சிதறிவிட்டதே என்று அவருக்கு வருத்தமும் கோபமும் மூண்டன. தன் கையில் உள்ள தடியில்ை யானையை அடிக்க ஓடினர். அருகில் கின்ற மக்கள் அது கண்டு. நகைத்தனர். அந்த முதியவரால் மத யானையை என்ன செய்ய முடியும்? ஒடித் தளர்ந்து கீழே விழுந்துவிட்டார். விழுந்தவர் மெல்ல எழுந்தார். - . . . .

மிக்க அன்போடு பறித்த மலர்களெல்லாம் கீழே: சிதறிக் கிடந்த காடசியைக் கண்டார். அவர் உள்ளம் சிதறியது. கண்கள் நீரை உகுத்தன. துக்கம் தாங்க வில்லை. வாய்விட்டுப் புலம்பினர்.

.சிவபெருமானே ஒலம்! யானேயை உரித்துப் போர்த்த வனே ஒலம் எளியவர்களுக்கு வலிமையாக நின்று துணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/38&oldid=585532" இலிருந்து மீள்விக்கப்பட்டது