பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிபத்த காயனர் 33

செய்கிறவனே ஒலம்! அன்புடைய அடியவர்களுக்கு அறி வாய் இருப்பவனே ஒலம் தெளிந்த அமுதுபோல இனிக்கும் பெருமானே ஒலம் கங்கையாற்றையும் சந்திர னேயும் அணிந்த திருமுடியிலே சாத்துவதற்கல்லவா இந்த மலரைப் பறித்தேன்? இவற்றை யானையா சிந்துவது? திரி புர தகனம் செய்த பெருமானே! இது அடுக்குமா? யமனே உதைத்த திருவடியை உடையவனே ஒலம் முடிவில்லாத மூலப்பொருளே ஒலம்! எத்தனையோ அன்பர்கள் பெருங் கூட்டத்தில் ஏழையாகிய என்னையும் ஒரு பொருளாக எண்ணுவதற்குரிய பேறு எனக்கு உண்டோ?' என்று அவர் ஒலமிட்டு அழுதார். . .

அவர் புலம்பிய புலம்பல் யாவர் காதிலும் விழுந்தது.

வயசான கிழவர் இரங்கி அரற்றுவதை அவர்கள் கேட்டு

இரங்கினர். அதற்குமேல் அவர்களால் என்ன செய்ய முடியும்?

அப்போது அங்கே வந்து கொண்டிருந்தார் எறிபத்தர். நெற்றியிலும் உடம்பிலும் திருநீறு விளங்க, கழுத்து, தலே, கை, ஆகிய இடங்களில் ருத்திராட்ச மாலே அணி களாகப் பொலிய வந்தார் அவர். அவர் கையில் கோடரி இருந்தது. அந்த ஊரில் மட்டும் அன்று சுற்று வட்டாரங் களிலும் அவரை அறியாதவர் யாரும் இல்லை. காவலரைக் கண்டு அஞ்சும் கள் வர்களைப்போல அவரைக் கண்டால் பொல்லாதவர்கள் கடுங்குவார்கள். சிவனடியார்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால் அவர்களே அவர் சும்மா விட மாட்டார். தம் கையில் உள்ள கோடரியால் வீசி விடுவது கூட உண்டு. இப்படி எறிதலால் அவருக்கு எறிபத்தர் என்ற பெயர் உண்டாயிற்று. சொந்தப் பெயர் வழக்கில் இல்லாமலே ம்றைந்துவிட்டது. 3.

அவர் வீதியில் வந்து கொண்டிருந்தார். முதிய அந்தண ராகிய சிவகாமியாண்ட்ார் புலம்பிக் கொண்டிருந்த இட த்

3 . * - o . - . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/39&oldid=585533" இலிருந்து மீள்விக்கப்பட்டது