பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காயன்மார் கதை

துக்கு அருகில் அவர் வந்துவிட்டார். அவரைக் கண்ட வுடன் வீதியில் நின்றிருந்தவர்களின் வயிற்றிலெல்லாம் புளியைக் கரைத்தது. ஏன் நீங்கள் இந்த அடாத செய ஆலப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?' என்று அவர் கடிங் தால் என் செய்வது? -

அருகில் வந்த எறிபத்தனர் சிவகாமியாண்டாரை, :ஏன் இப்படி அரற்றுகிறீர்கள்?' என்று கேட்டார். அவர் நிகழ்ந்ததைச் சொன்னர். எறிபத்தருக்குக் கோபம் மூண்டது. சிவனடியார்களுக்கு எங்கே போனுலும் பகையாக இருப்பது யான்தான்' என்று சொல்லிக் கொண்டே, அவர் பட்டத்து யானையை நாடி ஓடினர். ஆணவத்தையே யானையாகச் சொல்வர் பெரியோர். அது இறைவன்பால் ஆருயிர் செல்லவொட்டாமல் தடுத்து கிற் கிறது. அந்த ஆணவமென்னும் மத யானையை அப்போது எறிபத்தர் கினைந்து சொன்னுரோ? கோப்பெருஞ்சோழர் முன் பிறவியில் சிலந்தியாக இருந்தார். திருவானேக்காவில் இறைவன்மேல் அச்சிலந்தி வலை பின்னி நிழல் செய்தது. அதை ஒர் யானை வந்து கலைத்தது. அதை கினேந்துதான் அப்படிச் சொன்னரோ அவர் எந்த எந்த யானைகளே கினேத்தாரோ? யார் அறிவார்? அப்போது பட்டத்து யானே.மேல் அவருக்கு உண்டான கோபம் அளவுக்கு அடங்கினதன்று. அவர் போகும் வேகத்தைக் கண்டு யாவரும் அஞ்சினர். என்ன நிகழப் போகிறதோ என்று நடு ந்டுங்கினர். . . . . . . . . . . . . . . . . . .” - . . .

எறிபத்தர்யானைக்கு முன்சென்ருர். அது அவரைப் பற்ற வந்தது. தம் கையில் இருந்த கோடரியால் ஓங்கி வீசினர். எந்தக் கை சிவகாமியாண்டாரது பூக் கூடை யைப் பற்றிச் சிதறியதோ அந்தக் கை துண்டுபட்டுக் கீழே விழுந்தது. அது விழுவதற்கு முன்பே இடி இடித்தது இபால் முழங்கிக்கொண்டு யானே கீழே விழுங்து புரண்டு

உயிர் நீத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/40&oldid=585534" இலிருந்து மீள்விக்கப்பட்டது