பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிபத்த நாயஞர் 35

எறிபத்தருக்கு இன்னும் கோபம் ஆறவில்லை. இது. த்ர்ன் அறிவு இல்லா விலங்கு. இது செய்த காரியத்தை

அறிவுள்ள நீங்கள் பார்த்துக்கொண்டா இருந்திர்கள்?"

என்று பாகரையும் பரிக்கோற்காரரையும் நோக்கிச்

றிேனர். அவர்கள் ஏதோ சமாதான்ம் சொல்ல வந்தார்

கள். எறிபத்தர் அதைக் கேட்கக் காத்திருக்கவில்லை. தம். கோடரியை வீசி அந்த ஐந்து பேரையும் வீழ்த்தினர்.

| LIT&T ஒரு பக்கம் குருதி வெள்ளத்தில் பிணமாய்க் கிடக்க, ஐந்து மனிதர்கள் வெட்டுண்டு கிடக்கப் போர்க், களம் போலக் காட்சியளித்த அவ்விடத்தில் ரத்தக் கறை தோய்ந்த கோடரியைத் தாங்கிக் கொண்டு வெற்றி வீர ரைப்போல நின்ருர் எறிபத்தர்.

அவ்விடத்தில் இருந்தவர்கள் ஓடினர்கள். வாயில் காவலரிடம் போய், :அரசனிடம் போய்ச் சொல்லுங்கள், பட்டத்து,யானே வெட்டுண்டது. இதைப் போய்ச் சொல் லுங்கள், பாகர்களும் வெட்டுண்டார்கள் என்பதையும் அறிவியுங்கள்' என்று பதற்றத்துடன் சொன்னர்கள். காவலர் ஒன்றையும் விசாரிக்கவில்லை. அவர்கள் திடுக் கிட்டு உள்ளே ஓடினர்கள். அரசனிடம், சிலர் பட்ட்த்து யானையைக் கொன்றுவிட்டார்களாம்' என்று சொன்னுர்கள், - -

உறையூரில் இருந்து ஆண்டுவந்த சோழ மன்னர் பரம் பரையில் உதித்த அரசன் அவன். கருவூரிலும் ஒர் அரண்மனை கட்டிக்கொண்டு பல காலம் வந்து தங்கி வாழ் பவன். புகழ்ச் சோழன் என்பது அவன் பெயர். அவன் காலத்தில் அவனுக்குப் பகைவர்கள் யாரும் இல்லாமையால் போரே நிகழவில்லை. சிவபெருமானிடம் மிக்க அன்புடைய வகை இருந்தமையின், சிவாலயங்களைப் பாதுகாப்பது, சிவனடியார்களுக்கு வேண்டிய கன்மைகளைப் புரிவது

முதலிய தொண்டுகளில் அவன் ஈடுபட்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/41&oldid=585535" இலிருந்து மீள்விக்கப்பட்டது