பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாயன்மார் கதை

. காவலர் சொன்ன செய்தி சோழ மன்னன் காதில் விழுந்தது. பட்டத்து யானே கொலையுண்டதா? யார் சொன்னர்கள்?' என்று கேட்டான். -

அரண்மனை வாயிலில் ஒரு பெருங் கூட்டம் வந்து நிற்கிறது. கூட்டத்தில் இருப்பவர்களே இச் செய்தியைச் சொன்னர்கள்' என்றனர் காவலர்.

சோழனுக்குச் சினம் மூண்டது. பட்டத்து யானே யைக் கொல்வது என்பது எளிய செயல் அன்று. தன் சாம் ராஜ்யமே குலைந்துவிட்டது போன்ற உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. யாரேர் பகைவர் செய்த வேலை இது என்று எண்ணிக் கொண்டான். யார் இதைச் செய்தார்கள் என்று விசாரித்தறியும் பொறுமை அவனுக்கு அப்போது இல்லை. உடனே புறப்பட்டுவிட்டான்.

பகைவர்கள் செய்த செயல் என்ற கினேவில்ை புறப் பட்டவன் ஆதலின், படைகளையும் உடன் வர ஏவின்ை. சேனத் தலைவர்கள் வந்தார்கள். தேர்கள் வந்தன. களிறுகள் வந்தன; குதிரைகள் வந்தன; படை வீரர்களும் திரண்டு வந்தார்கள். படைக் கலங்கள் மின்னின. சங்கு முதலியவை முழங்கின. சோழ மன்னன் ஒரு குதிரையின் மேல் ஏறிக்கொண்டு சென்ருன். தன் ஊரிலே புகுந்து இந்தத் துணிவுள்ள செயலைச் செய்த பகைவர்கள் படை களுடன் வந்திருக்கவேண்டும் என்பது அவன் எண்ணம்.

மன்னனும் பிறரும் சென்ருர்கள். களிறு வீழ்ந்திருந்த இடத்தை முதலில் அரசன் குறுகினன். அங்கே பகைவர் கூட்டத்தை அவன் காணவில்லை. பட்ட களிற்றுக்கு அருகில் வேறு ஒரு களிற்றைப் போல எறிபத்தர்தாம் நின்று கொண்டிருந்தார். யானையைக் கொன்றவர்கள் ஒடி யிருக்கவேண்டும் என்று அரசன் நினைத்தான். அருகில் உள்ளவர்களே நோக்கி, அவர்கள் எங்கே?' என்று -கேட்டான். и ",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/42&oldid=585536" இலிருந்து மீள்விக்கப்பட்டது