பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிபத்த நாயனர் 37

இதோ இங்கே நிற்கிருரே, இவர்தாம் கொன்ருர். மன்னர் பிரானுடைய யானைக்குத் திங்கு செய்ய வேறு பகைவர் யார் இங்கே வர முடியும்?' என்று அருகில் நின்ற வர்கள் சொன்னர்கள். - - -

அதைக் கேட்டானே இல்லையோ, மன்னன் உடம்பு கடுங்கியது. எறிபத்தரை உற்று கோக்கினன். அவரிடம் அவனுக்குக் கோபம் மூளவில்லை. அவரை உடனே கட்டிப் பிடிக்கும்படி அவன் ஏவவில்லை. இந்தப் பெரியவருக்குக் கோபம் உண்டாகும்படியாக ஏதோ தவறு நேர்ந்திருக் கிறது' என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. உடனே சேனைகளை யெல்லாம் திரும்பிப் போகும்படி ஏவினன். குதிரையினின்றும் கீழே குதித்தான்.

தன் களிறு போய்விட்டதே என்ற துயரமே அவனுக்கு அப்போது தோன்றவில்லை. கல்ல வேளே! கடவுள் இந்த மட்டிலும் காப்பாற்றினர். இந்தப் பெரியவரை யானே ஒன்றும் செய்யாமல் இவர் பிழைத்தாரே' என்று எண்ணி ஆறுதல் அடைந்தான். -

கீழே இறங்கிய அரசன் நேரே எறிபத்தர்முன் சென்ருன். கண்ணிர் மல்க அவர் காலில் விழுந்தான். *இங்கே என்ன அபசாரம் நேர்ந்ததோ அதை நான் அறிய வில்லை. யானே பட்டதென்று மாத்திரம் கேள்வியுற்றேன். இங்கே வந்த பிறகுதான் தேவரீருடைய உள்ளம் வருக் தும்படியான தீங்கு நேர்ந்திருக்க வேண்டுமென்று தெரிய வந்தது. அந்தத் திங்குக்குப் பிராயச்சித்தமாக யானே யையும் பாகரையும் தண்டித்தது போதுமா? அருள் செய்ய வேண்டும்' என்று பணிவுடன் பேசின்ை.

சிவகாமி யாண்டார் கொண்டுபோன மலர்களே இந்த யானே சிதறியது. பாகரும் குத்துக்கோற்காரரும் அதைத் தடுக்கவில்லை. அதனால் இது செய்தேன்' என்று எறி. பத்தர் சொன்னர். ? *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/43&oldid=585537" இலிருந்து மீள்விக்கப்பட்டது