பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாயன்மார் கதை

கேட்ட வேந்தன் மறுபடியும் அவர் காலில் வீழ்ந்தான். :இந்த அபராதம் மிக மிகப் பெரிது. என்னுடைய ஆட்சி யில் என் யானேயே சிவனடியாருக்குத் தீங்கு செய்தது என்ருல் நான் உலகில் இருந்து பயன் இல்லை. இந்த அபராதத்துக்கு யானையைக் கொன்றது போதாது; அதை ஒட்டிச் சென்றவர்களே வீசியதும் போதாது; இந்த யானைக்கு உரியவனை என்னேயும் கொல்வதே முறை: என்று சொல்லி, இந்தப் பாவியைத் தேவரீருடைய கோடரியால் கொல்ல வேண்டாம். அது புனிதமானது. இதோ இந்த வாளால் என்னே வீசி அபராதத்தினின்றும் என்னே விடுதலை செய்ய வேண்டும்' என்று தன் உட்ை வாளே எடுத்து மீட்டினன்.

- எறிபத்தர் இதை எதிர்பார்க்கவில்லை. அரசன் தன் நிலையை மறந்து, தன் களிற்றின் பெருமையை மறந்து, சிவனடியாருக்கு இழைத்த தீங்கைத் தம்மைக் காட்டிலும் மிகுதியாக எண்ணி வருந்துவதை உணர்ந்தார். ஆ! என்ன உத்தமமான அன்பு' என்று எண்ணினர். அவன், கொடுத்த வாளே வாங்காமல் சிறிது கின்ருர். அப்போது ஒர் எண்ணம் அவர் உள்ளத்தில் பளிச்சிட்டது. இவன் உண்மையிலே தன் உயிரைக் கொடுக்க நிற்கிருன். நாம் வாளே வாங்காமல் இருந்தால் தானே இவ்வாளேக் கொண்டு கொன்று கொண்டால் என் செய்வது?’ என்று அஞ்சி அந்த வாளை அவர் வாங்கினர். - -

அப்போது சோழன் முகம் மலர்ந்தது. எறிபத்தர்முன் தலை வணங்கித் தொழுத கையனகி நின்றன். என் பிழை. யைத் தீர்க்க இப்பெரியார் முன் வந்தாரே! என்ற எண்ணத்தால் அவன் உவகை கொண்டான்.

ஆனல் எறிபத்தர் உள்ளத்தில் புயல் கொந்தளித்தது; அலைகடல் குமுறியது; ஊழித் தீக் கொழுந்துவிட்டது, என்ன பைத்தியக்காரத்தனம் செய்தேன் முறை தவருது கிற்கும் மன்னன், இறைவனிடம் அன்பு செய்யும் பக்தன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/44&oldid=585538" இலிருந்து மீள்விக்கப்பட்டது