பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிபத்த காயனர் 39

அடியார்களுக்கு வரும் துன்பத்தை ஆற்ருத அடியார்க்கடி யான் ஆகிய இவன் மனம் புண்படும்படியல்லவா காம் செய்துவிட்டோம் என்ற சிந்தனே அவர் உள்ளத்தே ஓடியது. இத்தனே உத்தமனுக்குத் தீங்கு கினேத்த நாமும் குற்றவாளியல்லவா? இந்தக் குற்றத்துக்குத் தண்டனை யார் அளிப்பார்? நாமே அளித்துக் கொள்ளவேண்டும்’ என்று எண்ணினரோ இல்லையோ, தாம் வாங்கிக்கொண்ட வாளேத் தம் கழுத்திலே வைத்து அறுத்துக் கொள்ளப் போளுர் . -

அரசன், ஐயோ! என்ன இது?’ என்று கூவியபடியே அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டான். எறிபத்தர் அசையாமல் கின்ருர். -

அப்போது எல்லோரும் வியக்கும்படி ஒரு குரல் எழுங் தது: 'உங்கள் அன்பின் வலிமையை உலகத்துக்குக் காட்டும் பொருட்டே இறைவன் திருவருள் இந்த கிகழ்ச்சி யைக் கூட்டியது' என்று அக்குரல் வானிலிருந்து எழுங் தது. அதே சமயத்தில் மண்ணிற் கிடந்த யான உயிர் பெற்று எழுந்தது. பாகரும் குத்துக்கோற்காரரும் உயிரு டன் எழுந்து கின்றனர். . x

எறிபத்தர் மனம் உருகிக் காவலன் காலில் விழுந்தார். சோழமன்னன் கையில் இருந்த வாளே எறிந்துவிட்டு அப் பெரியார் காலில் விழுந்தான். அப்போது அங்கே சிவகாமி யாண்டர் வந்து கின்ருர். என்ன ஆச்சரியம்! அவருடைய பூக்கூடை கிறையப் பழையபடி மலர்கள் நிரம்பியிருந்தன. யானேயின் உடலிலும் பாகரின் உடம்பிலும் உயிரை மீட்டும் புகுத்திய திருவருள், பூக்கூடையிலும் மலர்களேப் புகுத்திவிட்டது. எல்லோரும் சிவபிரானுடைய பேரருளே யும், அடியவர்களின் அன்புச் சிறப்பையும் உணர்ந்து ஆர வாரித்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/45&oldid=585539" இலிருந்து மீள்விக்கப்பட்டது