பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாயன்மார் கதை

ஏதிை நாதர் சிறந்த சிவபக்தர். தம்முடைய தொழிலில் வரும் வருவாயைச் சிவனடியார்களே வழிபட்டு உபசரிப்பதிலேயே செலவிட்டு வந்தார். திருநீறு பூசிய தொண்டர் யாரைக் கண்டாலும் உடனே அவர் காலில் விழுந்து பணிந்துவிடுவார். உடம்பிலுள்ள பெருந்திறலும் உள்ளத்தில் இருந்த பெருந் தீரமும் போரிலும் படைக் கலப் பயிற்சியிலும் சிறந்து விளங்கின. அடியார்களைக் கண்டபோது உடல் குழைய உள்ளம் நெகிழப் பணிந்து உபசரிப்பார். பகைவர்முன் நிமிர்ந்து கிற்கப் பழகிய அவர், அடியார்முன் பணிந்து நிற்பார். - -

ஏனதி நாதர் போர்க்கோலம் கொண்டு புறபபட்டார். அவரைச் சார்ந்தவர்களும் அவருடன் சேர்ந்துகொண்டார் கள். அதிகுரனுடனும் பலர் படைகளுடன் வந்து சேர்க் தனர். ஒரு பரந்த வெளியில் இரு சாராருக்கும் போர் நடைபெற்றது. இரண்டு கட்சியினரும் கடுமையாகப் போர் புரிந்தனர். பலர் மாண்டனர். இறுதியில் அதிசூரன் படை தோற்றது. அவன் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.

அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே வர வில்லை. ஏதிை நாதரை வென்றுவிடலாம் என்ற எண்ணம் குலேந்துவிட்டதை எண்ணி வருந்தின்ை. எப்படியாவது அவரைத் தொலைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் பின்னும் தலைதுாக்கி எழுந்தது. வஞ்சக முறையில்ை அவரை வென்றுவிட வேண்டுமென்று தீர்மானித்தான். அதற்குரிய வழிகளையும் வகுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்தவுடன் ஏனதி நாதருக்கு ஒர் ஆள் மூலம் செய்தி ஒன்றை அனுப்பின்ை. இரண்டு பேரும் போர் செய்து யாருக்கு வெற்றி என்று திர்மானிக்கும் திறத்தில் நம்மைச் சார்ந்தவர்களேயும் ஈடுபடுத்துவதில் வீண் சேதம் உண்டாகும். நாம் மாத்திரம் தனித்து ஒரு வரும் அறியாமல் வாட்போர் செய்யலாம். அதனால் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/48&oldid=585542" இலிருந்து மீள்விக்கப்பட்டது