பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன தி காத நாயனர் 4 3

வலிமையை அறிந்து கொள்ளலாம்' என்று சொல்லி அனுப்பின்ை. ஏதிை காதர் அதற்கு உடன்பட்டார்.

குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் இருவரும் வாட் போர் புரிவதென்று தீர்மானமாயிற்று. அப்போது அதி சூரன் தன் திட்டப்படியே ஒன்று செய்ய ஆரம்பித்தான். திருறுே பூசியவருக்கு ஏதிைநாதர் ஒரு திங்கும் செய்யமாட் டார் என்பதை அவன் கேள்வியுற்றிருந்தான். ஒரு நாளும் திருநீற்றைத் தொட்டறியாத அந்தத் தீயவன் அன்று நெற்றி நிறையத் திருறுே பூசிக்கொண்டான். வெண் ணிறு முகத்தில் இருந்ததேயன்றி, அகத்தில் வஞ்சக எண்ண மாகிய கறுப்பை வைத்துக்கொண்டு சென்ருன்.

போர் புரியும் களத்துக்குச் செல்லும்போது தன் முகம் மாத்திரம் தெரியாமல் கைக்கேடயத்தால் மறைத் துக்கொண்டான். இருவரும் பொரத் தொடங்கினர். எனதி நாதர் தம் பகைவனை ஒரே வீச்சில் கொன்றுவிடும் சமயம் அறிந்து புலிபோலப் பாய்ந்தார். அந்தச் சமயத்தில் அதிசூரன் தன் முகம் அவருக்கு நன்முகத் தெரியும்படி யாகக் கேடயத்தைக் கீழே தாழ்த்தின்ை.

அதிகுரனுடைய நெற்றியை ஏணுதி நாதர் கண்டார். திருநீறு அதில் பளிச்சென்று தோன்றியது. அடடா" என்ன காரியம் செய்தேன்! இதற்கு முன்பு இவர்மேல் காணுத திருநீறு இவர் நெற்றியில் விளங்குகிறதே! இவர் சிவனடியார் ஆகிவிட்டார். இனி இவர் நமக்குப் பகைவர் அல்லர். இவருடைய விருப்பம் நிறைவேறும்படி செய்வது கம் கடமை' என்ற எண்ணம் மீதுாரத் தம் வாளேயும் கேட யத்தையும் கீழே போட நினைத்தார். ஆனால் அடுத்த கணம் வேறு ஓர் எண்ணம் குறுக்கிட்டது. நாம் படைக் கலத்தைக் கீழே போட்டுவிட்டால் நிராயுதபாணியைக் கொன்ற பாவம் இவரைச் சாரும். அதற்கு இடமின்றிச் செய்ய வேண்டும்' என்று கருத்துத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/49&oldid=585543" இலிருந்து மீள்விக்கப்பட்டது