பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு பக்தியில் சிறந்தது; கடவுளுடைய வழி பாட்டில் முன்கிற்பது; திருக்கோயிலால் பெருமை பெற் றது; அடியார்கள் பால் வைத்த அன்பாலும் உயர்ந்தது. இந்த காட்டில் உள்ள கோயில்களேக் கண்டு வியவாதவர் கள் இல்லை. அந்தக் கோயில்களில் இறைவன் எழுந்தருளி யிருப்பதோடு வேறு ஒருவகைக் கோயில்களிலும் அவனு டைய திருவருள் விளக்கத்தைக் காணலாம். அந்தக் கோயில்கள் நடமாடும் கோயில்கள். சிவனடியார்களேயே அந்தப் பெயரால் திருமூலர் சிறப்பிக்கிரு.ர். -

இறைவன் எழுந்தருளிய கோயில்களுக்குத் தனித் தனியே புராணம் உண்டு. அப்படியே நடமாடும் கோயில் களாகிய அடியவர்களுக்கும் புராணம் உண்டு. சிவனடி யார்களே நாயன்மார் என்பார்கள். தனி அடியார்கள் அறுபத்துமூவர் தொகை அடியார்கள் ஒன்பது பேர். இந்த எழுபத்திருவருடைய வரலாறுகளேயும் கூறுவது பெரிய புராணம். ஒன்று பெரிய புராணம் ஆல்ை மற்றவை சிறிய புராணங்கள் அல்லவா? நாயன்மார் வரலாற்றைச் சொல்லும் பெரிய புராணம் தோன்றிய பிறகு சிவபிரானு டைய புராணங்கள் சிறியனவாயின! - -

பெரிய புராணத்தைப் படித்து காயன்மார்கள் வரலாறுகளே உணர எல்லோராலும் இயலாது. ஆதலின் எளிய நடையில் அந்த வரலாறுகளே எழுதினல் யாவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என்று அமிர்தவ சனி ஆசிரியர் பூரீ முத்துசாமி ஐயரவர்கள் சொன்னர்கள். அவர் கள் தூண்டியதல்ை இவற்றை அமிர்தவச்னியில் எழுதி வரலானேன். அந்த வரலாறுகளில் ஒரு பகுதி இந்திப் புத்தகத்தில் உள்ளன, மற்றவையும் தொடர்ந்து வரும்.

இவற்றை எழுத எனக்கு ஊக்கம் அளித்த இரு சு. முத்துசாமி ஐயரவர்களுக்கு என் கன்றி உரியதாகும்.

. காந்தமலை' } கி. வா. ஜகந்நாதன் கல்யாண நகர், சென்னை-28, ! Q.忍三?58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/5&oldid=585499" இலிருந்து மீள்விக்கப்பட்டது