பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 நாயன்மார் கதை

அதல்ை வாளேயும் பலகையையும் கையில் பற்றியபடியே போர் செய்பவரைப் போலவே பாசாங்கு செய்தார்.

முன்னலே கின்ற பாதகன் எளிதில் தன் வாளே ஒச்சித் தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனுதிநாதர் உடம்பிலிருந்து அவர் தலே துணிந்தது. ஆனல் அவர் கொள்கை - திருநீற்றுத் தொண்டர் விருப்பத்தை நிறை வேற்ற வேண்டும் என்ற விரதம்-துணியாமல் வென்றது. அந்த விரதத்தை அவர் தம் உயிரைக் கொடுத்துக் காப் பாற்றினர்.

அப்போது ஏதிை நாத நாயனருடைய பெருமையை உலகத்தோருக்குத் தெரிவிக்க இறைவன் உமாதேவி யாருடன் எழுந்தருளி, அவரைத் தம் அணுக்கத் தொண்ட ராகிய சிவகணத்தில் ஒருவர் ஆக்கிக்கொண்டார்.

அடியார்களைப் போற்றும் திறத்தில் உயிர் போனலும் தம் கொள்கையை விடாமல் மெய்யான வீரத்தில் சிறந்து .கின்ருர் ஏதிைநாதர். அதனோடு அடியார் பகைவராக இருந்தாலும், அவர் விருப்பத்தைக் குறைவின்றி நிறை வேற்றும் வகையில் செயல் செய்தார். உயிரினிடம் இருக் கும் ஆசையிலும் கொள்கையில் இருக்கும் உறுதி சிறந்து கிற்பதால், இத்தகையவர்கள் செயற்கரிய செய்த பெரியவர் களாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/50&oldid=585544" இலிருந்து மீள்விக்கப்பட்டது