பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கண்ணப்ப நாயனர்

பொத்தப்பி காட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் காகன் என்ற வேடர்குலத் தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுக் குத் தத்தை என்ற மனேவி இருந்தாள். நெடு நாட்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லாமையால் தங்களுடைய குல தெய்வமான முருகக் கடவுளே வழிபட்டுத் தங்கள் குறையைத் தீர்க்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். கள். அப்பெருமானுடைய திருவருளால் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போதே உடல் வலிமையும் கணமும் கொண்டு பிறந்தமையால் திண்ணன் என்று பெயர் வைத்து அருமையாய் வளர்த்து வந்தார்கள்.

திண்ணனர் நாளொரு மேனியும் பொழுதொரு. வண்ணமுமாக வளர்ந்து வந்தார். வேடர்களுடைய வழக் கப்படி குழந்தைக்கு உரிய பருவத்திலே ஆசிரியனேக் கொண்டு வில்வித்தையைக் கற்பித்தார்கள். நாட்டிலுள்ள வர்கள் அட்சராப்பியாசம் செய்விட்பது போலவே இந்த, வில் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. - -

வேடர் குல மைந்தருக்குப் பதினறு பிராயம் நிரம் பியது. அவருடைய தந்தையாகிய நாகன் கிழவனகிவிட் டான். மாதத்துக்கு ஒரு முறையாவது வேட்டையாடச் சென்று வன விலங்குகளை அழித்து வருவது அவனுடைய வழக்கம். முப்பு வந்துவிட்டமையால் இந்தக் கடமையை அவனுல் செய்ய முடியவில்லை. மற்றவர்கள் வன விலங்கு களின் கொடுமை மிகுதியாயிற்றென்று முறையிட்டுக். கொண்டார்கள். அதைக் கேட்ட நாகன், நான் முதுமைப் பருவத்தை அடைந்துவிட்டேன். ஆதலால் பழையபடி என்னல் வேட்டையாட இயலாது. நம் குலத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/51&oldid=585545" இலிருந்து மீள்விக்கப்பட்டது