பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.6 நாயன்மார் கதை

தலைமையைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை. இனி என்னுடைய மகனேயே நீங்கள் தலைவகைக் கொள்ளுங் கள்' என்ருன்.

அப்படியே வேடர்களுக்குத் தலைவராகத் திண்ணனுரை ஆக்கினர்கள். தெய்வங்களுக்குப் பூசை போடும் தேவராட் டியை அழைத்து வன தேவதைகளுக்குப் பூசை நிகழ்த்தச் சொன்னுன் நாகன். அப்படியே அவள் செய்து திண்ண ைைர வாழ்த்தினுள். அன்று தம் தந்தையினிடமிருந்து தோற் கச்சையையும் உடைவாளையும் பெற்ற திண்ணணுர் வேடர்களுக்குத் தலைவராகவும் அந்த மலைப்பகுதிக்கு அரச

ராகவும் ஆனர்.

அன்று குல வழக்கப்படி முதல் முதல்ாக வேடர் களோடும் வேட்டையாடப் புறப்பட்டார். வேடர் சிங்க ம்ாகிய திண்ணனர். காட்டுக்குள் வேடர் கூட்டம் புகுந் தது. பறைகளையும் கொம்புகளையும் முழக்கி ஆரவாரத் தோடு அவர்கள் சென்ருர்கள். காய்கள் அவர்களோடு சென்றன. அங்கங்கே உள்ள புதர்களே அகலத்து மறைக் திருந்த விலங்குகளே வெளிவரச் செய்து வேட்டையாடினர் கள். மான்களும் மரைகளும் வீழ்ந்தன. கரடிகளும் யானை களும் குலைந்தன. புலிகள் எதிர்த்துச் சிறி வேடர்களின் அம்புக்கு இலக்காகி மடிந்தன.

இவ்வாறு வேட்டை கடக்கும்பொழுது ஒரு பெரிய காட்டுப் பன்றி அவர்களே எதிர்ப்பட்டது. அது வலைகளே யெல்லாம் அறுத்து மிடுக்குடன் ஒடியது. அதனேக் துரத்திக்கொண்டு திண்ணனர் ஓடினர். மற்ற வேடர் களும் காய்களும் பின் தொடர முடியாதபடி பன்றி மிக்க விரைவாக ஒடிக்கொண்டிருந்தது. திண்ணணுர் அதனைப் பின்பற்றி ஓடினர். தம்முடைய இளங் தலைவர் அவ்வாறு ஒடுவதைக் கண்டு காணன், காடன் என்னும் இரண்டு வேர்டகள் அவருக்குத் துணையாக ஓடினர்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/52&oldid=585546" இலிருந்து மீள்விக்கப்பட்டது