பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயஞர் 4. 7

ஒடிய பன்றி ஒரு குன்றின் அடிவாரத்தில் வந்து நின்றது. அதைத் தொடர்ந்து ஓடிவந்த திண்ணனர் உடைவாளே உருவி அதை இரண்டு துண்டாக வெட்டி ர்ை. உடன் ஓடி வந்த இருவரும் அவருடைய வேகத்தை யும் உறுதியையும் ஆற்றலையும் கண்டு வியப்பில் மூழ்கி னர்கள். அடேயப்பா! நம்மை இவ்வளவு தூரம் இந்தப் பன்றி இழுத்து வந்துவிட்டதே! இவ்வளவு தாரமும் எப்படி ஓடி வந்தோம்' என்று பிரமித்தார்கள். திண்ணனர் வீரத்தைப் போற்றி அவர் காலில் விழுந்து வணங்கினர்கள். - - -

கேரம் ஆனமையாலும் நெடுந்துாரம் ஓடி வந்தமை ய்ாலும் அவர்க்ளுக்குப் பசி எடுத்தது. இந்தப் பன்றியைப் ப்க்குவம் செய்து உண்டு தண்ணீர் அருந்துவோம்’ என்று அவ்விருவரும் கூறினர்கள். . . . . . . . .

தண்ணிர் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டார் திண்ணனர். . - -

  • {\ } * , - - - - , இந்தத் தேக்கமரக் கூட்டத்தைத் தாண்டிச் சென்ருல் பொன்முகலி என்று ஆறு ஒடுகிறது' என்று கானன் கூறினன். அவன் அந்த இடங்களுக்கெல்லாம் முன்பே வந்து பழகியவன்.

அங்கே. போகலாம். இந்தப் பன்றியை இழுத்து வாருங்கள்' என்று சொல்லித் திண்ணனர் புறப்பட, மற்றவர்களும் பின் சென்ருர்கள். -

நாளு, அதோ தோன்றும் குன்றுக்குப் போக லாமா?' என்று கேட்டார் வேடர் தலைவர்.

ஆம், போகலாம். அங்கே போனல் நல்ல் காட்சி களைக் காணலாம். அங்கே குடுமித் தேவர் இருக்கிருர், கும்பிடலாம்' என்ருன். . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/53&oldid=585547" இலிருந்து மீள்விக்கப்பட்டது