பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாயன்மார் கதை

இந்த மலையைப் பார்த்தால் எனக்கு ஏதோ ஒரு வகையான இன்பம் உண்டாகிறது. என்மேல் உள்ள பாரம் குறைவதுபோலத் தோன்றுகிறது. அந்தக் குடுமித் தேவர் எங்கே இருக்கிருர்?' என்று சொல்லியபடியே திண்ணளுர் வேகமாகச் சென்ருர்.

அவர்கள் பொன்முகலிக் கரையை வந்து அடைந்தார். கள். அங்கே தாம் கொண்டு வந்த பன்றியை இட்டார்கள். திண்ணனர் காடனே கோக்கி, தீக்கடை கோலால் தியை மூட்டு அதற்குள் நாங்கள் இம்மலையின்மேல் எறிப் பார்த்துவிட்டு வருகிருேம்' என்று சொல்லிவிட்டு நாணனே அழைத்துக்கொண்டு சென்ருர்.

அவர்கள் இருவரும் பொன்முகலியாற்றில் இறங்கி அவர்கள் கடந்த அப்பாலுள்ள திருக்காளத்தி மலைச் சார லே அடைந்தார்கள். மலையின்மேல் முன்னே காணன் செல்லப் பின்னே திண்ணணுர் ஏறினர். முன்னலே செய்த தவத்தின் பயணுக முடிவிலா இன்பத்தைத் தரும் அன்பின் முதிர்ச்சி அப்போது அவர்பால் உண்டாயிற்று. மலேயின் மேல் ஏற ஏற அவர் உள்ளம் நெகிழ்ந்தது. என்பும் உருகியது. ஒவ்வோர் அடி வைக்கும்போதும் அவருடைய வினைச் சுமை கழன்றுகொண்டே வந்தது. அன்பெனும் சக்தி அவரை மிக்க வேகமாக முன்னே இழுத்தது.

மேலே போகப் போக அவருக்கு வேறு ஒரு கினேவும் எழவில்லை. அன்பே உருவமாக மாறினர். மலையின்மேல் ஏறி அம்மலைக் கொழுந்தாக எழுங்தருளியிருக்கும் சிவ லிங்கப் பெருமானேக் கண்டார். அதற்கு முன் இருந்த வேகம் ஆயிரம், மடங்காகப் பெருகியது. பல காலம் காணுமல் இருந்த தாயைக் கண்ட குழந்தை போல் ஆர்ை. நெடுநாள் தொலைந்து போயிருந்த உயிர்மணியைப் பெற்ற காகராஜனேப் போல் இருந்தார். ஆனந்த வெள்ளத்தில் அழுந்தினர். உடம்பில் புளகம் போர்த்தது. அப்பெரு மானே அணுகும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/54&oldid=585548" இலிருந்து மீள்விக்கப்பட்டது