பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனர் 49

தோன்றியது. வேகத்தோடும் மோகத்தோடும் ஓடினர். சிவலிங்கப் பெருமானைத் தழுவிக்கொண்டார்; முத்த மிட்டார்; மோந்து பார்த்தார்; கண்ணிலே ஒற்றிக்கொண் டார். பெருமூச்சு விட்டார். கண்ணிர் அருவியாக வழிக் தது. இறைவனுடைய அருள் மின்சாரத் தாக்கி ல்ை அவர் அப்போது அடைந்த அநுபவத்தை என்னவென்று சொல்வது! - - --

இப்படி நெடுநேரம் இன்பக் கொந்தளிப்பிலே ஈடு பட்டிருந்த திண்ணனர், எனக்கு இவர் அகப்பட்டார். என்ன பாக்கியம்' என்று கூத்தாடினர். எம்பெரு மானே! வன விலங்குகள் நடமாடும் இந்த இடத்தில் நீர் தனியாக இருக்கிறிரே! துணைக்கு ஒருவரும் இல்லையே!” என்று வருந்தினர். அவர் கையிலுள்ள வில் தானே கழுவியது. அகப்பற்று புறப்பற்று எல்லாமே நழுவி விட்டன. முன்பு உண்டான பசியை மறந்தார். உடம் பையே மறந்தார். - -

இறைவனுடைய திருமேனியின்மேல் பச்சிலையும் பூவும் நீரும் இருப்பதைக் கண்டு, யாரோ இதெல்லாம் செய் திருக்கிருர்களே!' என்ருர். அப்போது நாணன், எனக் குத் தெரியும். நான் உன் தந்தையோடு இங்கே முன் ஒரு முறை வந்தபோது ஒரு பார்ப்பான் இந்தக் குடுமித் தேவரை ரோல் ஆட்டிப் பச்சிலையும் பூவும் இட்டான்' என்ருன், X

அப்படியா எம்பெருமானுக்கு இப்படிச் செய்தால் உவப்பாக இருக்கும் போலும் அப்படியால்ை நானும் இதைச் செய்வேன். இவர் பட்டினியாக அல்லவா கிடக் கிருர்? இவருக்கு யார் இறைச்சி உணவு அளிப்பார்கள்? இதோ தானே போய்க் கொண்டு வந்து இவருக்கு ஊட்டு கிறேன். ஐயோ! இவர் எத்தனே காலம் படடினியாக கிடக்கிருரோ!' என்று அங்கலாய்த்தார். உடனே ஒடிப் போய் இறைச்சி முதலியவற்றைக் கொண்டு வரவேண்டும்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/55&oldid=585549" இலிருந்து மீள்விக்கப்பட்டது