பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 0 காயன்மார் கதை

என்ற ஆசை தோன்றும். இவரைத் தனியே விட்டுப் போவதா?’ என்ற எண்ணம் அடுத்தபடி உண்டாகும். மறுபடியும், இவர் பசியோடிருக்கிருரேl' என்ற நினைவி ல்ை சிறிது தூரம் போவார்; பெருமானேப் பார்த்துக் கொண்டே போவார். பிரிய மனம் வராமல் ஓடி வருவார். கட்டித் தழுவிக்கொண்டு, உம்மை ஒரு கணமும் பிரிய மாட்டேன்' என்று குல்ழைவார். .

இப்படிப் போவதும் வருவதுமாகச் சில நாழிகைகள் கழிந்தன. இறைவரே! நீர் பசித்திருக்கிறீரே! போய் நல்ல இறைச்சி கொண்டு வரலாம் என்று எண்ணுகிறேன். நீர் இங்கே தனியாக இருக்கிறீரே ஆரும் துணையில்லையே! உம்மைத் தனியே விட்டு விட்டு நான் எப்படிப் போவேன்' என்று அழுதார். கடைசியில் ஒருவாறு மனத் தைத் திடப்படத்திக் கொண்டு கையில் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கண்ணிர் வாரத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போர்ை. அவருக்குப் பின்னல் காணனும் போனன். திண்ணனருடைய கிலே யைக் கண்டு அவனுக்கு அச்சமும் வியப்பும் உண்டாயின.

திண்ணனர் மலையிலிருந்து கீழே இறங்கினர். பொன் முகலியைக் கடந்து காடன் இருந்த இடத்துக்கு வந்தார். அவரைக் கண்டவுடன் காடன் எதிர் சென்று, இதோ நெருப்பைக் கடைந்து மூட்டியிருக்கிறேன். பன்றியும் இதோ இருக்கிறது. நாம் ஊர் போக நேரமாகிவிட்டதே! இத்தனே தாமதம் ஏன்?' என்று கேட்டான். -

அப்போது நாணன் அவனுக்கு விடை கூறினன்; "என்ன சொல்வது? அங்கே குடுமித்தேவரைக் கண்டு இவன் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டான். இப் போது வந்தது அந்தச் சாமிக்கு இறைச்சி கொண்டுபோகத் தான். நம்முடைய குலத் தலைமையை இவன் விட்டு விட்டான். சாமிக்குச் சொந்தக்காரகிை விட்டான்' என்ருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/56&oldid=585550" இலிருந்து மீள்விக்கப்பட்டது