பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயஞர் § 1 -

அதைக் கேட்ட காடன் திண்னனுரைக் கண்டு, 'திண்ணு, நீ என்ன காரியம் செய்தாய்? உனக்கு என்ன, பைத்தியம் பிடித்து விட்டதா? எங்களுக்கெல்லாம் தக்லவன் அல்லவா?' என்று கேட்டான்.

அவன் கூறியது அவர் காதில் படவில்லை. அவர் காதிருந்தும் செவிடரைப் போலானர். அவர் தம்முடைய உயிர் நாயகன விரைவில் சென்று அடையவேண்டுமென்று ஒரே ஞாபகமாக இருந்தார். ஆதலால் உடனே பன்றியை நெருப்பில் வதக்கி அம்பிலே கோத்து எடுத்தார். தசைகள் கன்முக வெத்த பிறகு அவற்றைத் தாமே பல்லினுல் கடித்துப் பார்த்தார். எந்த எந்தப் பகுதி மிக்க சுவையாக இருக்கின்றனவோ அவற்றைத் தனியே எடுத்துச் சருகில் யால் ஒரு தொன்னே தைத்து அதில் வைத்துக்கொண்டார்.

தசையைக் கடித்துக் கடித்து உமிழ்வதைக் கண்டார். கள் காணனும் காடனும். இதென்ன அதிசயமாக இருக் கிறது? சரியானபடி சாமி பிடித்திருக்கிறது போலும் பசிக்குத் தின் மைல் கடித்துக் கடித்து உமிழ்கிருன். கமக்கும் ஒன்றும் கொடுக்கவில்லே. இவனுடைய பைத்தி பத்தைத் தீர்க்க கம்மால் முடியாது. காகனிடம் சொல்லிப் பூசார்ச்சியையும் மற்ற ஆட்களேயும் அழைத்துக் கொண்டு

வரலாம்' என்று அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்,

அவர்கள் போனதையும் திண்ணனர் உணரவில்லை, கண் இருந்தும் குருடர் டோல் ஆர்ை. அவருடைய பொறிகள் யாவும் சிவக் காதல் மயமாயின. வேண்டிய அளவு தொன் னேயில் இறைச்சியை எடுத்துக் கொண்டார். அங்குள்ள செடிகளில் உள்ள மலர்களைப் பறித்துக்கொண் டார். ஒரு கையில் வில்லும் அம்பும் எடுத்துக் கொண் டார். பறித்த மலர்களைத் தம் தலைமயிரில் செருகிக்கொண் டார். மற் ருெரு கையில் இறைச்சித் தொன்னேயை ஏந்திக் கொண்டார். எம்பிரானுக்கு ரோட்டவேண்டுமே; அதற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/57&oldid=585551" இலிருந்து மீள்விக்கப்பட்டது