பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 . நாயன்மார் கதை

காகத் தம் வாய் நிறையப் பொன்முகலி நீரை ஏற்றுப் புறப் பட்டார். 'என் உயிர் நாயகர் பசித்திருப்பாரே!' என்ற நினைப்போடு வேகமாக வரலார்ை.

மலையின்மேல் ஏறிச் சிவலிங்கப் பெருமானைக்கண்டார். முதலில் அவர் மீதிருந்த மலர்களையும் இலைகளையும் தம் செருப்புக் காலால் துடைத்து நீக்கினர். பின்பு தம் அன்பை உமிழ்வார்போல் வாயிலுள்ள மஞ்சன நீரை உமிழ்ந்தார். அவருடைய காவாகிய இந்திரியம் அப்போது அடங்கி அந்த நீரின் தன்மையையோ சுவையையோ உணராமல் இருந்தது. பிறகு அவர் மெல்ல வளைந்து தம் தலையின்மேல் உள்ள மலர்களே உதிர்த்தார். அப்பால் தாம் கொணர்ந்த ஊனே முன்னே வைத்தார். தாய் தன் குழந் தைக்குக் கொஞ்சியும் கெஞ்சியும் அமுதுாட்டுவதுபோல ஊட்டத் தொடங்கினர். "என் நாயகரே, இந்த இறைச்சி அம்பிலே கோத்து நன்ருகப் பக்குவம் பண்ணியது. கர்வில்ை அதுக்கிப் பார்த்து இனிமை உடையதாகத் தேர்ந்து எடுத்தது. மிகவும் சுவையாக இருப்பது. இதைத்தின்ன வேண்டும்' என்று ஊட்டினர். -

கதிரவன் மறைந்தான். அந்தக் காளத்தி மலையின் மீது அன்பே உருவமாக மாறிய திண்ணணுர் பசியை மறக் தார்; பொறி உணர்ச்சியை மறந்தார்; ஊரையும் உறவை யும் மறந்தார்; உயிர் நாயகனே மாத்திரம் பற்றிக் கொண்டு. கின் ருர், இரவு வந்தது. எம்பெருமானே வன விலங்குகள் வந்து துன்புறுத்துமே காம் இவரை நன்ரு கப் பாதுகாக்க வேண்டும்' என்ற எண்ணத்தால் கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு இறைவனுக்கு அருகே இர்வெல்லாம் உறங்காமல் கின்றுகொண்டிருந்தார்.

விடித்தவுடன், இன்று எம்பிரானுக்கு இனிய இறைச்சியைக் கொண்டுவர வேண்டும். வன் மிருகங்களை வ்ேட்டையாடிக் கொன்று இறைச்சியைக் கொய்து பக்குவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/58&oldid=585552" இலிருந்து மீள்விக்கப்பட்டது