பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனர் 53

மாகக் கொண்டு வருவேன்' என்று அவர் மலையினின்றும் இறங்கினர். பல வகையான விலங்குகளே வேட்டையாடிக் கொன்ருர். -

திண்ணளுர் போனவுடன் காலேயில் இறைவனுக்குப் பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் திருக் காளத்திப் பிரானிடம் வந்தார். அங்கே இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடப்பதைக் கண்டு, ஐயையோ இந்த அகாசாரத்தை யார் செய்தார்கள்?' என்று பதறிஞர். யாரோ வேடர்கள் செய்திருக்க வேண்டுமென்று எண்ணி ர்ை. உடனே அவற்றையெல்லாம் மாற்றிப் பொன் முகலியிற் சென்று ரோடிவிட்டு வந்தார். செய்யவேண்டிய பரிகாரங்களே முதலிற் செய்து அப்பால் பூசைகளே கிகழ்த்தி விட்டுத் தம்மிடம் சென்ருர். - -

திண்ண்னர் தீ மூட்டி இறைச்சியைப் பக்குவமாக்கி முதல் காட் போலவே தாமே சுவை பார்த்து மிகவும் இனிய வற்றை இலைத் தொன் னேயில் எடுத்து வைத்துக்கொண் டார். முன்போலவே தம் தலையில் மலரையும் வாயில் திருமஞ்சன நீரையும் எடுத்துக் கொண்டார். திருக் காளத்தியப்பரிடம் சென்று முன் போலவே பூசனை புரிந்து இரவெல்லாம் விழித்திருந்தார். பகலில் வேட்டையாடு வதும் பின்பு பூசை புரிவதும் இரவில் விழித்திருப்பதுமாக அன்புருவாகிய அவ்வேடர் குல திலகர் செய்து வந்தார். சிவகோசரியாரும் ஒவ்வொரு நாளும் என்பையும் இறைச்சி யையும் நீக்கி நீராட்டி மந்திர விதியால் பரிகாரம் செய்து பூசை புரிந்து வந்தார். - -

  • நாணனும் காடனும் ஊர் சென்று திண்ணனர் கிலையை எடுத்துரைத்து நாகனையும் பூசாரிச்சி முதலியவர் களையும் அழைத்துவந்து காட்டினர்கள். அவர்கள் திண்ணனரிடம் ஏதேதோ சொல்லிப் பார்த்தார்கள். அவர்கள் கூறியது ஒன்றும் அவர் காதில் விழவில்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/59&oldid=585553" இலிருந்து மீள்விக்கப்பட்டது