பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 நாயன்மார் கதை

அவரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது தம்மால் இயலாத காரியம் என்று அறிந்து அவர்கள் போய்விட் டார்கள்.

இங்கே சிவகோசரியார் மனம் மிக வருந்தி, :எம் பெருமானே, ஒவ்வொரு நாளும் இந்த அநாசாரத் தைக் கண்டு மனம் பொறுக்கவில்லேயே அடியேன் என் செய்வேன்! இதைச் செய்வோர் யார் என்று தெரிய வில் இலயே!' என்று முறையிட்டுக் கொண்டார். அன்று இரவில் அவருடைய கனவில் சிவபெருமான் எழுந்தருளி யாரோ வேடன் செய்வது இது என்று கினேக்காதே. அவன் அன்டே உருவமாக இருப்பவன். அவன் எண்ணம், உரை, செயல் எல்லாம் நம்மைப் பற்றியனவே. அவனு டைய அறிவெல்லாம் நம்மை அறியும் அறிவே. அவன் தன் செருப்புக் காலால் முன்புள்ள மலரை நீக்கும்போது, முருகனக் கொஞ்சுகையில் அவன் சிற்றடி கம்மேல் படும் போது உண்டாகும் இன்பம் உண்டாகிறது. அன்புருவ மான அவன் உடம்பாகிய பாத்திரத்தில் வாய்வழியாக என் மேல் ஊற்றும் புனல் ஒரு முனிவன் செவி வழியாக வந்த கங்கைப் புனலவிடப் புனிதமானது. தன் தலையிலிருந்து அவன் உதிர்க்கும் மலருக்குப் பிரமவிஷ்ணுக்கள் செய்யும் அருச்சனை மலர்களும் சமானம் ஆகா. அவன் மென்று சுவைத்துப் பார்த்துத் தரும் ஊன் வேத கேள்வியில் இடும் அவியைவிடச் சிறந்தது. வேத முனிவர் சொல்லும் துதிகளை விட அவன் சொல்லும் அன்பு மொழிகள் எனக்கு இனிக்கின்றன. அவனுடைய அன்பு நிலையை உனக்குக் காட்டுகிறேன். நாளேக்கு நீ ஒளித்திருந்து பார்' என்று கூறியருளினர். சிவகோசரியார் துயிலுணர்ந்து எழுந்து வியந்து, அந்த வேடர் தலைவரைப் பார்க்கும் அவாவோடு இருக்தார். , , -

3 -

!. அன்று ஆருவது நாள். திண்ணனர் வழக்கம்போல் 'வேட்டையாடச் சென்று பூசைக்குரிய பொருள்களை எந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/60&oldid=585554" இலிருந்து மீள்விக்கப்பட்டது