பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனர் 55

வந்தார். வரும்போதே அவருக்குத் தீய சகுனங்கள் உண்டாயின. அவற்றைக் கவனித்தார். ஐயோ! எங்கள் சாமிக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ!' என்று படபடத் தார். இது என்ன? இந்தச் சகுனங்கள் இரத்தக் குறியைக் காட்டுகின்றனவே!' என்று உணர்ந்து வேகமாக ஓடிவந்தார்.

திண்ணனரின் திண்ணிய பக்தியை வெளிப்படுத்த வேண்டி அப்போது இறைவன் ஒரு சோதனை செய்தான். சிவலிங்கப் பெருமானுடைய வலக்கண்ணில் இரத்தம் கசிந்தது. அங்கே வந்த திண்ணனர் அதைக் கண்டார். துடிதுடித்துப் போளுர்; கிலேகுலேந்து வீழ்ந்தார்; எழுங் தார்; பதறினர்; இறைவன் கண்ணேத் துடைத்தார். :இந்தக் காரியம் செய்தவர் யார்? வேடரோ? வன விலங்கோ? யாராக இருந்தாலும் இதோ தொலேத்து விடு கிறேன்' என்று கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஒடிப் பார்த்தார். ஒருவரையும் காணவில்லை. ஐயோ! இதற்கு என்ன செய்வேன்?’’ என்று புலம்பினர். எங்கள் ஐயருக்கு என்ன புண் வந்தது? என் உயிருக்குயிராம் உத்தமருக்கு வந்த தீங்கு என்ன? மேவினர் பிரியமாட்டா விமலருைக்கு அடுத்தது என்னே?' என்று கதறினர். என்ன செய்தால் இது திரும்? புண்ணுக்குப் பச்சிலே கட்டுவார்கள். நான் போய்க் கொண்டு வருகிறேன்' என்று ஓடினர். ஏதேதோ பச்சிலை யைக் கொண்டுவந்து பிழிந்து இறைவன் கண்ணில் தடவி னர். ஒன்றிலும் இரத்தம் நிற்கவில்லை. இனி என்செய் வேன்' என்று துயரம் மீதுார்ந்து நின்றபோது அவருக்கு ஒரு நினைவு வந்தது. ஊனுக்கு ஊன் என்று சொல் வார்களே, அதைச்செய்து பாாக்கலாம்' என்று தோன்றவே, என்னுடைய கண்ணேப் பறித்து அப்புவேன் அப்போது இது நீங்கலாம் என்று ஒர் அம்பால் தம் கண்ணேத் தோண்டினர்; இறைவர் கண்ணில் அப்பினர். ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/61&oldid=585555" இலிருந்து மீள்விக்கப்பட்டது