பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாயன்மார் கதை

உடனே இரத்தம் கின்றுவிட்டது. திண்ணனர், தம் கண்ணில் இரத்தம் வழிவதை உணரவில்லை. கண் உள் ள இடம் அம்பால் புண் ஆனதையும் உணரவில்லை. உடம்பை மறந்த அன்பு கிலேயில் இருந்தார். இரத்தம் நின்றதைக் கண்டார். ஆனந்தக் கூத்தாடினர். நல்ல காரியம் செய் தேன்!” என்று தம் தோளைக் கொட்டி ஆரவாரித்தார்.

இறைவன் மீண்டும் சோதனை செய்யலானன். வலக் கண்ணில் குருதி கின்றதும், இடக்கண்ணில் இரத்தம் வரத் தொடங்கியது. அதைத் திண்ணனர் கண்டார். இப்போது அவருக்குத் துயரம் உண்டாகவில்லை. கைகண்ட மருந்தைத் தெரிந்து கொண்டேன். இன்னும் ஒரு கண் எனக்கு இருக்கிறதே! அதையும் தோண்டி இடுவேன்' என்று எண்ணினர். கண்ணே இழந்தால் இறைவன் கண் இருக்கும் இடம் தெரியாது. ஆதலால் அதை அடையாளம் காண வேண்டி, இறைவன் இடக் கண்ணில் தம்முடைய இடக்கால ஊன்றிக் கொண்டார். ஒர் அம்பை எடுத்துத் திம் கண்ணேத் தோண்டப் புகுந்தார். -

அதற்குள் இறைவனுக்குப் பொறுக்கவில்லை. தருமத்தையே வாகனமாகக் கொண்ட எம்பெருமான், திண்ண ைைர ஆட்கொண்ட கருணைக் கடல், திருக் காளத்தியப்பன் உடனே தன் திருக்கையை நீட்டித் திண்ணனர் கையைப் பிடித்துக் கொண்டு, கில்லு கண்ணப்ப, கில்லு கண்ணப்ப, கில்லு கண்ணப்ப' என்று மூன்று முறை கூறியருளின்ை.

இந்த நிகழ்ச்சியை மறைவிடத்திலிருந்து சிவகோசரி யார் கண்டார், தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவ பெருமான், கண்ணப்பா, நீ எப்போதும் என் வலப் பாகத்தில் கின்றிருப்பாயாக!' என்று அருள் செய்தான்.

கண்ணப்பர் ஆறே நாளில் இறைவனுடைய திரு வருளேப் பெற்ருர், - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/62&oldid=585556" இலிருந்து மீள்விக்கப்பட்டது