பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனர் 57

கல்லடிமங்கன் காலணுக் காசுக்காகத் தன் கையைக் றிேக் காட்டுகிருன். அந்த அளவில் அவன் உடலில் உண்டாகும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்கிருன்வெயிலில் வீதியில் புரளும் பிச்சைக்காரன் உடம்பில் சூரிய வெப்பம் உறைப்பதில்லை; உடம்பு மரத்துப்போகிறது. அவன் ஓரளவு உடம்புணர்ச்சியை மறந்து விடுகிருன். போர்க்களத்தில் வீரன் தன் மார்பில் புண்பட்டாலும் உறுப்பை இழந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் போர் செய்கிருன். அவனும் ஒரளவு உடம்பை மறந்து விடுகிருன். சண்டையிடும் சேவல்கூடப் போர் செய்யும் ஆத்திரத்தில் கத்திக் காயத்தைப் பொருட்படுத்துவதில்லே . அப்படி இருக்கப் பொறியுணர்ச்சியை மறந்து, சிவபெருமா னுடைய பக்திப் பெருக்கிலே மூழ்கி, முன்னேப் பற்றெல் லாம் நழுவி சின்ற கண்ணப்பர் தம் கண்னைத் தோண்டி அப்பியது இயற்கைக்கு மாறுபட்டது அன்று. அவருடைய உள்ளப் பான்மையை உணர்ந்துகொண்டால் அன்பின் விளைவாகிய இச்செயல் இயற்கையானதே என்று தெரிய வரும.

கண்ணப்பர் அன்பின் உச்சநிலையில் இருந்தார். அதல்ை மணிவாசகப் பெருமான், கண்ணப்பன் ஒப்ப தோர் அன்பின்மை கண்டதற்பின்' என்று சொன்னர். கண்ணப்பன் வேறு, அன்பு வேறு என்று கொள்ளக் கூடாது. அன்பே உருவமானவர் அவர். ஆதலால், *கண்ணப்பன் ஒப்பவோ ரன்பன் இன்மை' என்னுமல், கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை' என்று பாடினர் மணிவாசகர். ஆம்! அந்த அன்புக்கு இணையான அன்பு முன்பும் இல்லே, பின்பும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/63&oldid=585557" இலிருந்து மீள்விக்கப்பட்டது