பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. குங்கிலியக் கலய நாயனர்

சோழ மண்டலத்தில் உள்ளது திருக்கடவூர் வீரட் டம். மார்க்கண டேயருக்காகச் சிவபெருமான் காலனே உதைத்த திருத்தலம் அது. அங்கே இறைவனுடைய அருளே கினேந்து வாழும் அந்தணர் பலர் இருந்து வந்தனர். அவர்களுக்குள் கலயர் என்பவர் ஒருவர். அவர் திருக்கட வூர் வீரட்டத்தில் எம்பெருமான் சங்கிதியில் குங்கிலியத் தூபம் இடும் திருத்தொண்டைச் செய்து வந்தார்.

இறைவனுடைய திருவருள் அவரைச் சோதனை செய்து, உலகத்தாருக்கு அவருடைய பெருமையைக் காட்ட எண்ணியதனால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. தமக்கு வேண்டிய பொருள்களைக் குறைத்துக் கொண் டாரேயன்றி, இறைவனுக்கு இடும் குங்கிலியத் துாபத்தைக் குறைக்கவில்லை. வறுமை வளரவே தம்முடைய கன்று காவி களே விற்ருர், கிலத்தை விற்ருர்.

கடைசியில் ஒன்றும் இல்லாமற் போயிற்று. இரண்டு நாட்களாகக் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் உணவே இல்லை. அவர் கையில் இப்போது எப்பொருளும் இல்லாமல் வறண்டு போயிற்று. அப்போது அவருடைய மனைவியார், என் செய்வது? என்று யோசித்தார். அவர் திருக்கழுத்தில் திருமங்கலியம் மாத்திரம் இருந்தது. அதனேக் கழற்றித் தம் கணவரிடம் அளித்து, குழந்தை கள்.உணவின்றி வாடுகின்றன. இதைக் கொண்டு போய் விற்று நெல் வாங்கி வாருங்கள்' என்று சொல்லி அனுப் பினர். கலயர் அதனை வாங்கிக் கொண்டு நெல் வாங்கலாம் என்ற எண்ணத்தோடு வெளியே புறப்பட்டு வந்தார்.

அவர் தெருவின் வழியே வந்து கொண்டிருக்கையில் எதிரே ஒரு வணிகன் மாட்டின்மேல் எதோ பொதியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/64&oldid=585558" இலிருந்து மீள்விக்கப்பட்டது