பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்கிலியக் கலய காயஞர் 59.

போட்டுக்கொண்டு வந்தான். குங்கிலியக் கலய நாயனுர், என்ன மூட்டை அப்பா, இது?’ என்று கேட்டார்.

குங்கிலிய மூட்டை' என்ருன் அவன்.

அந்த வார்த்தை அவர் காதில் விழுந்தது. அவர் தாம் கெல் வாங்க வந்ததை மறந்தார். தம் மனைவியின் வேண்டு கோளே மறந்தார். தம் குழந்தைகள் பட்டினியோடு வாடு வதை மறந்தார். உணவு இன்றித் தாமே சோர்வடைந் ததை மறந்துவிட்டார். :ஆ! குங்கிலியமா? எம்பெருமான் கைங்கரியத்துக்கு உரிய பொருள் அல்லவா? இறைவ னுடைய திருவருளே என்னென்று சொல்வது! என் கையில் பொன்னத் தந்து எதிரே குங்கிலியப் பொதியையும் வரச் செய்திருக்கிருன்' என்று களிப்பெய்தினர். -

பொன் கொடுத்தால் குங்கிலியம் கொடுப்பாயா?" என்று வணிகனேக் கேட்டார்.

இதை விலைக்குக் கொடுக்கத்தான் கொண்டு வந்தேன். எத்தனே பொன்னுக்கு வேண்டும்?' என்று அவன் கேட்டான். -

உடனே அளவற்ற மகிழ்ச்சியை அடைந்த குங்கிலியக் கலயர் தம் கரத்தில் இருந்த தாலியைக் காட்ட, வணிகன் அதைப் பெற்றுக் கொண்டு குங்கிலியப் பொதியை அவருக்கு அளித்துச் சென்ருன். அதைப் பெற்ற நாயனர் பெரும் புதையலைப் பெற்ற வறியவனேப்போல கேரே கோயிலுக்குச் சென்ருர். குங்கிலியப் பொதியை அங்குள்ள் உக்கிராணத்திற் சேர்ப்பித்து இறைவனுடைய அருளை எண்ணி வியந்துகொண்டே இருந்தார். - -

இரவு வந்தது. வீட்டில் உள்ள கலயருடைய மனைவி யாரும் பிள்ளைகளும் பசியால் வாடித் துரங்கிப் போயினர். அப்போது இறைவன் திருவருளால் வீட்டில் நெல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/65&oldid=585559" இலிருந்து மீள்விக்கப்பட்டது