பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாயன்மார் கதை

பொன்னும் ஆடையும் அணியும் நிரம்பின. கனவில் கலய ருடைய மனைவியாருக்கு இறைவன் இச் செய்தியை அறி வித்துத் திருக்கோயிலில் இருந்த நாயனருக்கும் அறிவித் தான். அந்தப் பெண்மணியார் எழுந்து பார்க்கையில் வீடு முழுவதும் பொருள்கள் கிரம்பியிருப்பதைக் கண்டார். உடனே திருவமுது சமைக்கத் தொடங்கினர். குங்கிலியக் கலயரும் ஆலயத்திலிருந்து வந்து தம் மனேயில் இறைவன் திருவருளால் 'கழ்ந்தவற்றைக் கண்டு விம்மிதம் அடைந்து வாழ்த்தினர். பிறகு வழக்கம்போல் தம்முடைய திருத்தொண்டைக் குறைவின்றிச் செய்து கொண்டு வந்தார், . - திருப்பனந்தாள் என்னும் தலத்தில் செஞ்சடையப்பன் என்னும் திருகாமம் பூண்ட இறைவனுக்குப் பூசை புரிந்து வந்த ஆதி சைவர், ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அவருக்கு ஆண் மகவு இன்மையால் தம் பெண்ணே நோக்கி, t கோயிலுக்குச் சென்று பூசை செய்' என்று சொல்லிப் போனர். அவ்வாறே அவ்விளம் பெண் பூசைக்குரிய பண்டங்களைக் கொண்டு கோயில் சென்ருள். அபிடேகம் முதலியவை செய்த பிறகு மாலையை அணிய எடுத்தாள். அப்போது இடையில் இருந்த ஆடை நழுவவே அதனே இரு முழங்கைகளாலும் இடுக்கிக் கொண்டாள். கையில் மாலே இருந்தது. மாலை யைக் கீழே வைத்துவிட்டு உடையைக் கட்டிக்கொண்டு மீட்டும் மாலையை இறைவனுக்கு அணிய வேண்டும். இவ்வளவு யோசனை அந்தக் குழந்தைக்குத் தோன்றவில்லை. ஆடையை இடுக்கியபடியே மாலையைப் போட முடியாமல் தவித்துப் போள்ை. குழந்தையின் உணர்ச்சியைக் கண்ட இறைவன் வளைந்தான். உடனே குழந்தை மாலையைப் போட்டுவிட்டாள் பூசையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ருள். - -

மறுநாள் அவளுடைய தந்தையார் வந்து பார்த்த போது சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டார். குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/66&oldid=585560" இலிருந்து மீள்விக்கப்பட்டது