பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்கிலியக் கலய காயஞர் 6甘

சொன்னதைக் கேட்டு வியந்து, மீட்டும் சிவலிங்கப் பெரு

மானே கேரே கிமிர்த்திப் பார்த்தார்; முடியவில்லை.

உறவினர்களின் உதவியைக் கொண்டு முயன்ருர்; இயல

வில்லே. பின்பு இந்தச் செய்தி எங்கும் பரவியது. சோழ

மன்னன் வரையில் எட்டியது. அம் மன்னன் யானை, கு திரை முதலிய சேனைகளுடன் வந்து, சிவலிங்கத்தின்

மேல் பட்டைச் சுற்றச் செய்து அதன்மேல் கயிற்றைக்

கட்டி யானேகளைக் கொண்டு இழுக்கச் செய்தான்.

யார் இழுத்தாலும் அவர்கள் கையிளேத்து விழுந்தார் களேயன்றிச் சிவலிங்கம் கி.மி ரவில்லை. ஒவ்வொரு நாளும் இந்த முயற்சி கிகழ்ந்து கொண்டே இருந்தது. தமிழ்நாடு முழுவதும் இந்தச் செய்தி பரவியது. திருக்கடவூரில் இந்த குங்கிலியக் கலயருக்கும் இது தெர்ந்தது. பலரும் கயிற்றை இழுத்து இளேத்துப் போகிருர்கள் என்ருல், கானும் அந்த இளேப்பில் பங்கு கொள்வேன்' என்று அவர் திருப்பனந்தாளுக்குச் சென் ருர்,

அவர் இறைவன் திருமேனியில் ஒரு மணிக் கயிற்றைக் கட்டி அதைத் தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுக்க, முயன்ருர். மற்றவர்கள் கையால் இழுத்தார்கள். அவரோ கழுத்திலே கயிற்றைக் கட்டிக்கொண்டு இழுத் தார். மற்றவர்கள் கை வலி உண்டர்னல் கிறுத்தினர்கள். அவரோ கயிறு கழுத்தில் இறுகினல், உயிர்விட வேண்டிய. கிலேயில் தம்மை வைத்துக் கொண்டு இழுத்தார். சிவலிங்கம் கிமிராவிட்டால் தம் கழுத்து இறுகும், தம் உயிர் போகும். என்று அவர் அஞ்சவில்லை இழுக்கத் தொடங்கினர்.

அவர் கயிற்றிலைா இழுத்தார்? தம்முடைய ஒருமைப் பாடுடைய அன்பில்ை இழுத்தார். அத்தகைய அன்பருக்கு. ஊறுபாடு வரும்படி இறைவன் விடுவான கலயனர் தம் கழுத்தில் கயிற்றைப் பூட்டி இழுக்கத் தொடங்கியதுதான் தாமதம், உடனே சிவவிங்கம் கிமிர்ந்துவிட்டது. குழந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/67&oldid=585561" இலிருந்து மீள்விக்கப்பட்டது