பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாயன்மார் கதை

யின் அன்புக்காக வளைந்த பெருமான் குங்கிலியக் கலய காயனர் அன்பு கண்டு கிமிர்ந்தார்.

அது கண்டு யாவரும் ஆரவாரம் செய்தனர். மன்னன் துயரம் நீங்கி நாயனரைப் போற்றினன்.

தாடகை என்னும் ஆதி சைவப் பெண்ணுக்கு இறை வன் இரங்கிய இடமாதலின் அத்தலத்துக்குத் தாடகேச் சுரம் என்ற திருகாமம் உண்டாயிற்று.

அப்பால் இறைவனுக்குரிய குங்கிலியத் திருத் தொண்டை நெடுநாள் செய்துகொண்டு வாழ்ந்து, பின்பு இறைவன் திருவடி நீழலில் இணைந்து பேரின்ப வாழ்வு பெற்ருர் குங்கிலியக் கலயர். -

12. மானக் கஞ்சாற நாயனர்

சோழ நாட்டில் கஞ்சாறுார் என்னும் திருத்தலத்தில் மானக்கஞ்சாறர் என்ற சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவர் சோழ அரசர்களுக்குச் சேனதிபதியாக இருந்தவர்களின் குடியில் பிறந்தவர். இறைவன் திருவருளால் நல்ல செல்வ மும் வள வாழ்வும் உடையவராக வாழ்ந்தார். தாம் பெற்ற பொருளை இறைவனுடைய அடியார்களுக்கு எப்போதும் ஈந்து வழிபட்டு உவக்கும் தன்மை உடையவர் அவர்.

அவருக்கு நெடுங்காலமாக மக்கட்பேறு இல்லாமல் இருந்தது. இறைவனைத் தமக்கு மகப்பேறு வேண்டு மென்று அவர் வேண்டினர். அவனுடைய திருவருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நெடுங்கால மாகத் தவம் செய்து இறைவன் திருவருளால் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/68&oldid=585562" இலிருந்து மீள்விக்கப்பட்டது