பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாபளூர் 链3

பெண்ணுதவின் அந்தக் குழந்தையை மிக அருமைப் பாட் டுடன் அவரும் அவருடைய மனைவியாரும் வளர்த்து வந்தார்கள். .

பேதைப் பருவம் கடந்து, பெதும்பைப் பருவம் அடைந்து, பின்பு மங்கைப் பருவம் எய்தி அழகு பொங்க மணத்துக்குரிய செல்வியை அடைந்து கின்ருள் மானக்கஞ் சாறான் அருமைப் புதல்வி. அப்பெண் அழகும் வளமும் அறிவும் சிறந்து விளங்குதலை அறிந்த ஏயர்கேர்ன் கலிக் காம நாயனர் என்பவர், முதியவர்களே அனுப்பித் தமக்கு அப்பெண்ணே மணம் பேசும்படி செய்தார். அவர்கள் மானக் கஞ்சாறரிடம் வந்து தம் கருத்தைத் தெரிவித்தார் கள். அவர் அவர்கள் வாயிலாக ஏயர்கோன் கலிக்காம் ருடைய தகுதியை உணர்ந்தார். கலிக்காமர் சிறந்த சிவ பக்தர் என்பதையும் தெரிந்து கொண்டார். ஆகவே, இவர் கம் மகளுக்கு எவ்வகையாலும் ஏற்புடைய் மணவாளர்' என்று எண்ணித் தம் மகளை மணம் செய்து அளிக்க ஒப்புக் கொண்டார். . . . .

பெரியவர்களைக் கொண்டு முகூர்த்த நாள் வைத்தார் க்ள். திருமணத்துக்குரியவற்றை இருசாராரும் செய்யத் தொடங்கினர். திருமண நாள் வந்தது. ஏயர்கோன் கலிக் காமரும் அவரைச் சார்ந்தவர்களும் கஞ்சாறுரர் வந்து சேர்ந்தார்கள் அன்று கஞ்சாமர் பெண்ணுக்கு வாச ரோட்டித் திருமணத்துக்கு ஏற்ற அலங்காரங்களேயெல் லாம் செய்யலானர்கள். -

அப்போது சிவபெருமான் கஞ்சாறருடைய அடியார் பக்தியை உலகுக்கு வெளிப்படுத்தத் திருவுள்ளம் கொண் டான். மகாவிரதம் பூண்ட முனிவராக காயருைடைய மனேக்கு எழுந்தருளினன். மகா விரதம் என்பது சைவ பேதங்களில் ஒன்று. எலும்பிலான பல மணிகளே அம். முனிவர் அணிந்திருந்தார். தலையில் சிகையும் அதில் என்பு மணியும் விளங்கின. நெற்றியில் திருறுே ஒளிர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/69&oldid=585563" இலிருந்து மீள்விக்கப்பட்டது