பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காயன்மார் கதை

அந்த அடியார் வருவதைக் கண்டதும் மானககஞ் சாறர் அவரை வரவேற்றுத் திருவடியில் விழுந்து பணிந்து, எழுந்தார். இந்தச் சமயத்தில் தேவரீர் எழுந்தருளியது அடியேனுடைய பாக்கியம்' என்று சொல்லி கின்ருர். அம் முனிவர் வீட்டில் இருக்கும் அலங்காரங்கள் முதலிய வற்றைக் கண்டு கேட்பவரைப்போல, இந்த வீட்டில் ஏதோ மங்கல காரியம் நடக்கப் போகிறதுபோல் தோன்று. கிறது. என்ன அது?’ என்று கேட்டார். நாயனர், என் மகளுக்குத் திருமணம் இன்று நிகழவேண்டும்' என்று கூறவே முனிவர், அப்படியா சோபனம் உண்டாகட் டும்' என்று ஆசி கூறுனர். நாயனர் தம் மகளே வந்து முனிவருடைய திருவடியில் விழுந்து வணங்கச் செய்தார்.

தம்மைப் பணிந்த பெண்ணைப் பார்த்தார் முனிவர். அவர் பார்வை அவளுடைய நெடுங் கூந்தலின்மேல் சென்றது. மானக்கஞ்சாறரைப் பார்த்து, இவளுடைய கூந்தல் கிடைத்தால் நம்முடைய பஞ்சவடிக்குப் பயன் படும்' என்ருர்.

அதைச் செவியுற்ற கஞ்சாமர் பெரும்பேறு பெற்ற வரைப் போன்ற உவகையை அடைந்தார். கையில் வாளே உருவினர். மணப்பீடத்தில் அமரப் போகும் நிலையில் இருக்கிருள் அவள் என்பதை மறந்தார். தாம் செய்யப் போகும் செயலால் மணமகன் சிற்றம் அடைதல் கூடும் என்பதையும் எண்ணவில்லை. கணப் போதில் தம் மகளு டைய கூந்தலை அடியோடு அரிந்து முனிவர் திருக்கரத்தில் கொடுத்தார். -

அதை வாங்குவதற்குக் கை நீட்டியவராக கின்றிருந்த பெருமான் மறைந்தருளினன். உடனே வானத்தில் விடை யின்மேல் உமாதேவியுடன் எழுந்தருளித் தன் திருக் கோலத்தைக் காட்டி, உன் அன்புத் திறத்தை உலகறியச் செய்தோம்' என்று திருவாய் மலர்ந்தருளினன்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/70&oldid=585564" இலிருந்து மீள்விக்கப்பட்டது