பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அரிவாட்டாய நாயனுர்

சோழ காட்டில் கணமங்கலம் என்பது நெல் வளம் மிக்க பதி. அவ்வூரில் வேளாண் குலத்தில் தாயனர் என்ற அன்பர் ஒருவர் கல்லொழுக்கமும் சீலமும் உடையவராய் இல்லற வாழ்வில் சிறந்து கின்ருர். சிவபெருமானிடத்தில் மாருத அன்புடையவர் அவர். தான் படைத்த பொருள் களில் கல்லனவற்றைத் தேர்ந்தெடுத்துத் தன் கணவனுக் குத் தருவது நன்மகள் இயல்பு. அப்படி நல்ல பொருள் களே இறைவனுக்குக் காணிக்கையாக்க வேண்டும் என் னும் ஆர்வம் உடையவராக இருந்தார் காயர்ை. -

நாள்தோறும் சிவபெருமான் திருக்கோயிலுக்குச் செக்

நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் அனுப்பி இறை வனுக்கு நிவேதனம் செய்விப்பதை விரதமாகக் கொண் டிருந்தார் அவர். எந்தக் காரியத்துக்குத் தடை வந்தாலும், இதை மாத்திரம் நிறுத்தாமல் செய்து வந்தார். கடைப் பிடியில் பிறழாமல் நின்ற அவருடைய அன்பை ஊரினர் ஓரளவு அறிந்திருந்தனர்.

குறிக்கோள் ஏதும். இல்லாமல் வாழ்கிறவர் வாழ்வு வீனகும். குறிக்கோள் ஒன்றை மேற்கொண்டு இன்னல் வரும்போது அதை நழுவவிடுகிறவர்கள் கோழைகள். அவர்கள் இறைவன் திருவருள் கிடைத்தாலும் நழுவ விட்டுவிடுவார்கள். எந்த கிலேயிலும் எந்த இடர் வந்தா லும் தரம் கொண்ட கொள்கையை விடாமல் பிடித்து ஒழுகுகிறவர்கள் உலகில் உயர்ந்த கிலே பெறுவார்கள்.

இறைவன்பால் அன்புடைய்வர்களுக்குச் சோதனை பல நிகழும். தாம் பெற்றவற்றை உற்ருர் உறவினரோடு உண்டு வாழ்பவருக்கே பல தடைகள் உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/72&oldid=585566" இலிருந்து மீள்விக்கப்பட்டது