பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனர் 63

தொடங்கினர். என்னுடைய அன்பும் புண்ணியமும் மிகுதியாக இருந்தால் இவ்விடத்திலேயே எம்பெருமான் இப்பொருள்களை ஏற்றுருள்வானே! என் அன்பு போதாது என்பதை நானே நன்கு அறிவேன்' என்று ஏங்கிக் குலேக் து அவர் ஊட்டியை அரியப் புக்கபோது இறைவன் திருவுள்ளம் கனிந்தான். அதற்குமேல் சோதனை செய்ய ஐயனுக்கு உள்ளம் இல்லை.

உடனே அந்தப் பிளப்பிலிருந்து ஒரு திருக்கரம் தோன்றி ஊட்டியை அரிந்த தாயனர் கரத்தை வாளோடு பற்றி கிறுத்தியது. அதே சமயத்தில் வெடுக்கு வெடுக் கென்று மாவடுவைக் கடிக்கும் ஒலி கேட்டது. இந்த அற்புதத்தைக் கண்ட தாயனர் இறைவன் கருணையை கினேந்து உருகினர். அடியேனுடைய அறிவின்மையைக் கண்டும் அடியேனே ஆளாக்கிக் கொள்ளும் பொருட்டு இங்கே வெடிப்பிலும் எழுந்தருளி அமுது செயதருளிய பெருமானே! பரஞ்சோதியே உமாதேவியைப் பங்கிலு டைய அப்பனே! பவளமேனியனே! புரிசடைப் புராணனே! போற்றி போற்றி!' என்று வாழ்த்தினர். அப்போது இறைவன் இடப வாகனகை எழுந்தருளி, நின்னுடைய விரதம் கன்று. கின் அன்பைக் கண்டு உவந்தோம். இனி t பின் ம&னயாட்டியோடு எம் அருகில் வாழ்வாயாக'

என்று அருளிச் செய்து மறைந்தான்.

இறைவன் இவ்விடத்தில் அமுது செய்யும் பேறு பெற்றிலேனே' என்று அரிவாளில்ை தம் கழுத்தை அரியப் புக்கமையால் அவருக்கு அரிவாள் தாய நாயனர் என்ற பெயர் உண்டாயிற்று. -

கொண்ட கொள்கையில் பிறழாமல் நின்று, அது பிறழும்போது உயிரையும் விடத் துணிந்தது பெருவீரம். இத்தகைய வீரமே நாயன்மார்களிடம் உள்ள சிறப்பு.

---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/75&oldid=585569" இலிருந்து மீள்விக்கப்பட்டது