பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆயை நாயனர் -

ஆயர் குலத்தில் அணி விளக்காகத் தோன்றினவர் ஆயை காயர்ை. ஆயர்கள் பசு, எருமை, ஆடு எனனும் மூவகை இனங்களையும் மேய்ப்பார்கள். ஆனயர் ஆனினங் க்ளை மாத்திரம் மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டார். அவரு டைய இயற்பெயர் வேறு என்றே தோன்றுகிறது.

இப்போது திருவானேக்கா இருக்கும் இடத்தைச் சூழ்ந்த இடங்களுக்கு மழநாடு என்ற பெயர் பழங்காலத் தில் வழங்கி வந்தது. அதன் மேற்பகுதி மேல் மழநாடு." அக் காட்டில் திருமங்கலம் என்ற ஊரில் ஆளுயர் உதித் #srss.

அவ்வூரைச் சுற்றி முல்லே நிலமாகிய காடுகள் அமைக் திருக்கும். ஒவ்வொரு நாளும் ஆளுயர் ஆகிரைகளே முல்லே நிலத்துக்குக் கொண்டு சென்று மேயவிட்டு மாலையிலே அழைத்து வருவார். அவர் சிவபிரானிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். மனமொழி மெய்களால் சிவபெருமானது. தொண்டை இடைவிடாமல் செய்பவர். .

ஒவ்வொரு நாளும் அவர் கன்றுகள், பால் மறந்த பசுக் கள், கறவை மாடுகள், சினேப் பசுக்கள், கன்று போட்ட பசுக்கள், காளைகள் ஆகியவற்றை நிரை கிரையாக ஒட்டிச் சென்று, புல் உள்ள இடங்களில் மேயவிட்டு, கல்ல தண்ணீரை அருந்தச் செய்வார். காட்டு விலங்குகளால் அவற்றிற்கு இடையூறு ஒன்றும் நேராமல் பாதுகாப்பார். அவரைச் சார்ந்து வேறு பல கோவலர்கள் இத் தொழி இக்கு உதவி புரிந்து வந்தார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/76&oldid=585570" இலிருந்து மீள்விக்கப்பட்டது