பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுய நாயனர் 7 1

ஆனய காயனர் முல்லை நில மக்களின் இயல்புக்கு ஏற்பப் புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவரானர். சிவ பெருமானுடைய புகழைப் பாடும் பாடல்களேக் குழலில் ஊதி இன்புற்ருர். இறைவனுக்குரிய ரீ பஞ்சாட்சரத் தையே இசைக்கு ஏற்றபடி அமைத்து வேய்ங்குழலில் பாடப் பயின்ருர், அதில் அவர் வல்லவரும் ஆனர். -

ஆயர்களுக்குரிய ஆடை அணிகளுடன் ஆயைர் ஒரு நாள் ஆகிரையை மேய்த்துவரும் பொருட்டுப் புறப்பட் டார். அப்போது கார்காலம் தன்னுடைய எழிலேயெல் லாம் காட்டிப் பரந்தது. கார்காலத்தில் கொன்றை மரம் பூத்து விளங்கும். காட்டுக்கு வந்த ஆணுயர் தம் எதிரிலே பொன்னிறம் பெற்ற மலர்கள் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் ஒன்றைக் கண்டார். கொத்துக் கொத் தாகப் பூக்கள் நிறைந்து விளங்கிய அதைக் கண்டவுடன் நாயனருக்குச் சிவபெருமானே நேர் விற்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அவரிடம் இயல்பாக இருந்த பக்தி பொங்கி எழுந்தது. உடனே அம்மரத்தின் அருகில் நின்று தம் குமுலே எடுத்துத் திருவைந்தெழுத்தை இசை யுடன் அமைத்து வாசிக்கத் தொடங்கினர். தம்முடைய திரு அதரத்தில் குழலே அமைத்து வண்டு பூவில் மொய்ப் பது போல விரலால் துளைகளே வருடிப் பாடலானர். முதலில் சுருதி சோதனை செய்து, ஆரோகண அவரோக ணம் கூட்டிப் பிறகு முல்லேப் பண்ணே வாசித்து, அப் பண்ணில் திருவைந்தெழுத்தை அமைத்து ஊதினர். மந்தரம், மத்திமம், தாரம் என்ற மூனறு ஸ்தாயிகளிலும் அவர் இசை பெருக்கினர்.

அவர் ஊதியபோது பரவிய இசை கல்லேயும் கரைக்கும் படியாக அமைந்தது. தேனேயும் அமுதையும் கலந்து வெள்ளமாக ஓடவிட்டது போன்று இருந்தது. அந்தத் தெய்விக இசை மக்களே மாத்திரமன்றி மற்ற உயிர்களேயும் கவர்ந்தது. அறுகம்புல்லை நிறையக் கறித்து அச்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/77&oldid=585571" இலிருந்து மீள்விக்கப்பட்டது