பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காயன்மார் கதை

போட்டுக் கொண்டிருந்த பசுக்கள் அசை போடுவதை மறந்தன. தாயின் மடியில் வாய் வைத்துப் பாலேக் குடித் துக்கொண்டிருந்த கன்றுகள் பால் உண்ணுவதை மறந் தன. காளைகளும் மான்களும் பிற விலங்குகளும் மயிர் குத்திட்டு கிற்கத் தம்மையே மறந்து வந்து சூழ்ந்து கின்றன. மயில்கள் ஆடுவதை மறந்து அருகே வந்தன. மற்றப் பறவைகளும் அந்த இசை வெள்ளத்தில் அகப் பட்டு அங்கே வந்து படிந்தன. வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த ஆயர்கள் வேலையை மறந்து வாய் திறந்த படியே குழலிசையில் ஈடுபட்டார்கள்.

ஆகாச வாசிகளாகிய இயக்கர், கின்னரர், கந்தரிவர் முதலியோர் விமானங்களிலே வந்தவர்கள் அப்படி அப் படியே அந்தரத்தில் கின்று விட்டார்கள்.

இசையென்னும் வெள்ளம் அலேயலேயாய் மோத அதற்குள் யாவரும் மூழ்கித் தம் உணர்வு ஒழிந்தனர். அந்த வெள்ளம் மேன்மேலும் உயர்ந்து பரவியது. இயற் கையில் கலிபவர்களும் கலியப்படுபவர்களும் தம் வேறுபாடு ஒழிந்து அந்த இசையில் ஒன்றி கின்ருர்கள். பாம்பு மயிலின்மீது மயங்கி விழுந்தது. சிங்கமும் யானையும் அரு கருகே நின்றன. புலி வாயைத் திறந்தபடியே கிற்க, அதன் முன் மான் கின்றது. அதன் வாயில் அரைகுறையாகக் கறிக்கப்பட்ட புல் தொங்கியது. -

காற்றும் வேகமாக வீசவில்லை; மரங்கள் கிளைகளே அசைக்கவில்லை; அருவிகளும் காட்டாறுகளும் சலசல ஒசையின்றி அமைதியாக ஓடின, மேகங்கள் அப்படி அப்படியே கின்றுவிட்டன; கடலும் அலையோய்ந்து கிடந்தது. -

- இப்படியாகச் சராசரங்கள் யாவும் இசைமயமாகி, அறிவும் கரணங்களும் ஆளுயருடைய குழலோசையில் கரைந்துபோக கின்றன. மெய்யன்பராகிய அவர் இசைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/78&oldid=585572" இலிருந்து மீள்விக்கப்பட்டது