பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுய காயஞர் 73

குழலோசையின் கான வெள்ளம் வையகத்தை கிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கியது. அது பின்னும் உயர்ந்து ஆனந்தத்தாண்டவ மூர்த்தியாகிய பரமசிவனது திருச் செவி யினருகில் அணைந்தது. அவ்வோசையைச் செவியால் ஏற்ற இசைக்கு மூலகாரணமாகிய சிவபெருமான் எம்பெரு மாட்டியுடன் இடப வாகனத்தின்மேல் ஏறி வானிடையே எழுந்தருளி வந்து ஆனய நாயனார்முன் நின்ருன் நாயன ருடைய பக்தியை வியந்து, இந்த கிலேயிலேயே நம்மிடம் வருவாயாக!' என்று அருள் செய்தான்.

தேவர்கள் மலர்மாரி பொழியவும் முனிவர்கள் வேத முழக்கம் செய்யவும் ஆளுய நாயனர் புல்லாங்குழல் இசைத்தபடியே சிவபெருமானுடன் சென்று மீளாத பேரின்ப வாழ்வு பெற்ருர்.

கலையில் திறமையுடையவர்கள் அந்தக் கலேயை இறை வனுக்கே உரிமையாக்கினல் மற்றவர்களே இன்பம் துய்க் கப் பண்ணுவதோடு தாமும் பேரின்பத்தை அடையலாம். இறைவனுக்கு அர்ப்பணம் பண்ணுமல் கலேத் திறமையில் நாம் சிறந்தோம் என்ற னைவோடு வாழ்பவர்கள் அகங் காரம் உடையவர்களாய், பொருமை, பகை ஆகிய வற்றிற்கு ஆளாகிக் கலையையும் தம் வாழ்க்கையையும் வீணே போக்குவார்கள்.

ஆளுயர் கலேயை ஈசுவரார்ப்பணம் ஆக்கினபடியால் அவர் இருந்த கிலத்திலே இயற்கையான பகைகூட ஒழிக் து விட்டது. எல்லா உயிர்களும் ஒரே உணர்வை அடைக் தன. இறைவன் திருவருளும் அவருக்குக் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/79&oldid=585573" இலிருந்து மீள்விக்கப்பட்டது