பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மூர்த்தி நாயனுர்

எல்லா வளங்களும் கிரம்பித் தமிழும் தென்றலும் இனிமை செய்து பரவும் பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை. அங்கே வணிகர் குலத்தில் தோன்றியவர் மூர்த்தி யார். இறைவனிடம் முறுகிய அன்பும், திருநீறும் உருத் திராட்சமுமாகிய சிவ சின்னங்களே அணிவதில் பேரார்வ மும் உடையவர் அவர். • .

வணிகப் பெருங்குலத்தில் பிறந்த செல்வரானலும், தம் உடல் வருந்தி இறைவனுக்குத் தொண்டுபுரிய வேண்டு மென் னும் ஆசையில்ை, ஒவ்வொரு நாளும் ஆலவாய்ச் சொக்கேசன் திருக்கோயிலில் சந்தனக் கல்வில் சந்தனம் அரைத்து இறைவன் திருக்காப்புக்கு அளித்து வந்தார். இந்தத் திருப்பணி ஒரு நாளும் முட்டாமல் நடைபெற்று வந்தது. -

அக்காலத்தில் பாண்டிய மன்னன் தக்க வலிம்ை யுடையவகை இல்லை. அதல்ை கருநாடக மன்னன் ஒரு வன் பாண்டி காட்டின்மேற் படையெடுத்து வழுதியை வென்று அந்த நாட்டைக் கைப்பற்றின்ை. மதுரை மாநகரில் கருநாடக அரசன் இருந்து ஆளத் தொடங் கின்ை. -

அவன் சமண சமயத்தைச் சேர்ந்தவனதலால் சமணர் கள் பலரைக் கருநாடக நாட்டிலிருந்து வருவித்தான். சமண குருமார்களுக்கு மதிப்பளித்தான். சைவர்களைப் புறக்கணித்தான். சிவனடிய்ார்களுக்கு அவனும் அவனைச் சார்ந்தவர்களும் பல இடையூறுகளைச் செய்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/80&oldid=585574" இலிருந்து மீள்விக்கப்பட்டது