பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி காயஞர் 75

மூர்த்தி நாயனுரையும் பல அல்லல்களுக்கு உட்படுத் தினர். அவருக்கு வேண்டிய பொருள்கள் கிடைக்காதபடி செய்தனர். என்ன அல்லல் வந்தாலும் ஆலவாய் இறை வனுக்குச் சந்தனக் காப்பு வழங்கும் திருத்தொண்டி னின்றும் அவர் பிறழவே இல்லை.

ஒரு நாள் சமணர்களுடைய சூழ்ச்சியினல் அவருக்கு எங்கும் சந்தனக் கட்டை கிடைக்கவில்லே. பகல் முழுவதும் அலேந்து பல இடங்களுக்குச் சென்று தேடியும் கிடைக் காமல் போயிற்று. அதனால் அவர் மனம் நைந்து வாடி இறைவன் திருக்கோயிலை வந்து அடைந்தார்.

அப்போது அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. சந்தனக் கட்டை தானே கிடைக்காமற் போயிற்றுே சந்தனம் அரைக்கும் கை கம்மிடம் இருக்கிறதே; கட்டையை அரைக்க இயலாவிட்டாலும் இந்தக் கையை அரைக்கலாமே!" என்று நினேத்தார். உடனே சந்தனக் கல்லில் தம் முழங் கையை வைத்துத் தேய்க்கத் தொடங் கினர்.

அப்படி அரைத்தபோது முழங்கையிலிருந்து இரக்கம் வந்தது. தேய்க்கத் தேய்க்க நரம்பும் எலும்பும் வெளிப் பட்டன. அப்போதும் அவர் கையைத் தேய்ப்பதை கிறுத்த வில்லை. அவர் செய்த செயற்கருஞ் செய்கையை அந்த கள்ளிரவில் எல்லோருக்கும் தாய்போல் உதவும் இறைவன் ஒருவன்தான் அறிவான். -

அவன் கருணக்கடல் அல்லவா? தன் அடியாருடைய உறுதியையும் அன்பையும் கண்டு வியந்தான். அவர் கை யில் எலும்பு தேயக் குருதி கொப்பளிப்பது கண்டு இரங் கின்ை. உடனே தன் திருவாக்கினல், அன்ப, உனக்குக் திங்கு விளேத்த மன்னனுடைய அரசை கைக்கொண்டு, திருப்பணியை முட்டின்றிச் செய்து நம்மை அடை வாயாக!' என்ற அருளுரையை எழுப்பினன். அது கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/81&oldid=585575" இலிருந்து மீள்விக்கப்பட்டது