பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ገ 8 . நாயன்மார் கதை

மூர்த்தியார் வியந்து கின்ருர். அவர் கையில் உண்டா யிருந்த தேய்வு மாறிச் சந்தனம் அரைத்த கைபோல மண மும் வளமும் பெற்றது.

அதே இரவில் கருநாடக மன்னனுடைய ஆயுள் முடி

வுற்றது. திடீரென்று கள்ளிரவில் அரசன் இறந்ததை அமைச்சர்கள் அறிந்து கூடினர். இறந்தவனுக்கு மைந்தன் யாரும் இன்மையினால், அடுத்தபடி ஆட்சி புரிவதற்கு உரியாரைத் தெரிந்தெடுத்து நிறுவும் பொறுப்பு அமைச்சர் களுக்கு ஏற்பட்டது. பழைய வழக்கப்படி பட்டத்து யானையின் கண்ணேக் கட்டிவிட்டு, அது யாரைத் தன்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதோ அவரையே அரசராகக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தனர் அமைச்சரும் சான்ருேரும்.

பொழுது விடிந்தது. பட்டத்துக் களிற்றின் கண் களைக் கட்டி, இறைவன் திருவருளே எண்ணி அமைச்சர் கள் அதை ஏவினர். அக்களிறு நேரே கோயில் வாயிலை அணுகியது. அப்போது மூர்த்தியார் இறைவன் திருவருட் செயலே எண்ணி வியந்தபடியே, அரசாட்சியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது திருவருட் சம்மத மால்ை அவ்வாறு செய்வதே நம் கடமை' என்று கினைந்து கோயில் வாயிலே அணுகினர். யானே அவர் முன் வந்து பணிந்து அவரைத் தன் பிடரியின் மேல் வைத்துக்கொண்டு செல்லத் தொடங்கியது.

யானையின் செய்கையை ஆவலோடு கவனித்துக்கொண் டிருந்த அமைச்சரும் பிறரும், அது மூர்த்தியாரைத் தாங்கி வருவதைக் கண்டனர். உடனே அவரை யானேயினின்றும் இறக்கிப் பணிந்து, திருமுடி தரித்து ஆட்சி புரிய வேண் டும்' என்று வேண்டினர். அப்போது மூர்த்தியார், பழைய படியே சைவ நெறி ஓங்கும்படி கான் அரசாட்சி புரிவேன்'

اسمه : " : ،

என்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/82&oldid=585576" இலிருந்து மீள்விக்கப்பட்டது