பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி காயனர் 7 7.

தேவரீர் திருவுள்ளப்படியே செய்தால் அதைத் தடுப் பவர் யார்?' என்று அமைச்சர்கள் பணிவுடன் கூறினர்.

மேணிமுடி தரித்துச் சந்தனம் பூசி அணிகலன் அணிந்து வாழும் அரசு எனக்கு வேண்டாம். இறைவ னுடைய திருவருளின் கருவியாக இப்பணியை மேற்கொள் வேன். எனக்கு ேேற சந்தனம்; உருத்திராட்சமே அணி கலன்; சடையே முடி. இந்த மூன்று அடையாளங்களுடன் அரசு கட்டில் ஏறுவேன்' என்று சொல்லவே, உடனிருங் தோர் மனம் உவந்தனர்.

சிவ சின்னங்கள் பொலிய மூர்த்தியார் களிற்றின் மேல் ஏறி ஊர் முழுவதும் உலா வந்தார்; அரசு கட்டிலில் ஏறி. னர். உயிர்களிடத்தில் இரக்கமும், அறத்தை வளர்க்கும் ஆற்றலும், சிவனடியாரிடத்தில் மதிப்பும், சிவபிரான் திருத்தொண்டில் ஈடுபாடும் உடைய மூர்த்தியாருடைய ஆட்சியில் பாண்டி நாடு சிவலோகம்போல விளங்கியது.

எல்லாம் திருவருளின் செயலென்று எண்ணி, மண் ளுளும் செல்வத்தைப் பெற்றும் சிவ சின்னமே பின்னும் உயர்ந்தவை என்று மதிதது வாழ்ந்தவர் மூர்த்தியார். என்ன அல்லல் வந்தாலும் தொண்டு புரிவதை மாற்ருத உறுதி படைத்தவர் அவர். .

மூர்த்தி நாயனர் மும்மையால் உலகாண்ட பெருமை யைப் பெரிய புராணம் மிகச் சிறப்பாகப் போற்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/83&oldid=585577" இலிருந்து மீள்விக்கப்பட்டது