பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. முருக நாயனுர்

சோமு காட்டில் திருப்புகலூர் என்பது ஒரு தலம். அங்கே இறைவனுக்குப பல சங்கிதிகள் இருக்கின்றன. அக்கினிசுவரர் என்பது பிரதானமான சங்கிதியில் எழுங் தருளியிருக்கும் பெருமான் திருநாமம். அந்தச் சங்கிதியை யன்றி இறைவன் மூன்று காலத் தலைவனகியும் கிற்கும் சந்நிதிகள் மூன்று இருக்கின்றன. அவற்றிலுள்ள பெரு மான்களுக்கு முறையே பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிஷ்யேசுவரர் என்ற திருநாமங்கள் வழங்கும். பூதம், வர்த்தமானம், பவிஷ்யம் என்பன முறையே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலத்தையும் குறிக்கும்.

அக்கினிசுவரராகிய கோணப்பிரானும் வர்த்தமானிசு வரரும் தேவாரப் பதிகங்களால் போற்றப் பெற்றவர்கள். வர்த்தமானிச்சரத்தைத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனர் ஒரு பதிகத்தால் துதித்திருக்கிருர். -

வர்த்தமானிச்சரத்தில் சந்நிதியில் ஒர் அடியாரின் அழகிய திருவுருவம் கிற்கிறது. அவர் முருக நாயனர்; திருப் புகலூரில் வாழ்ந்து இறைவனுடைய திருத்தொண்டில் ஈடு பட்டுப் பேறு பெற்றவர். - -

திருப்புகலூரில் அந்தணர் மரபில் உதித்தவர் முருக ஞர், ஆதி சைவ அந்தணர் என்று சொல்வது உண்டு. எப் போதும் இறைவனுடைய திருவடியை கினேத்து உருகும் சிந்தையை உடையவர் முருகர். சிவபிரானுக்குரிய தொண்டுகள் பல. அவற்றில் அப்பெருமானுக்குரிய பூ மாலைகளைச் சாத்தும் பணியை அவர் மேற் கொண்டார். விடிவதற்கு முன்னே துயிலெழுந்து புனித நீரில் மூழ்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/84&oldid=585578" இலிருந்து மீள்விக்கப்பட்டது