பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக நாயஞர் 8 :

திருஞான சம்பந்தர் திருமணம் திருகல்லூர்ப் பெரு மணத்தில் நிகழ்வதை அறிந்து முருக நாயனர் அங்கே சென்ருர். இறைவன் திருவருளால் அப்போது எழுந்த சோதியில் திருஞான சம்பந்தரும் பிறரும் புகுந்தபோது, இவரும் புகுந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் மாருத இன்ப கிலேயை அடைந்தார். •

முப்போதும் திருமேனி தீண்டும் உரிமையும் வேத ஆகம அறிவும் நிரம்பிய முருக காயர்ை, திருமலர் கொய்து. மாலே தொடுத்து அணியும் திருத்தொண்டைச் செய்தார். மனத்தாலும் வாக்காலும் உடம்பாலும் செய்யும் சிவத் தொண்டுகள் பக்குவம் இல்லாதவர்களிடம் வெவ்வேறு கிலேயாக இருக்கும். இறைவன் அருளில் ஒன்றிய சிவ ஞானிகளுக்கு எந்தத் தொண்டும் சமானமான நிலையுடை யதே. பஞ்சாட்சரத்தை எப்போதும் ஜபிப்பதும், திரு மாலைத் தொண்டு செய்வதும் முருக காயனருக்கு ஒன்ரு கவே இருந்தன. அப்பர் சுவாமிகளுக்கு உழவாரத் தொண் டும் தேவாரத் தொண்டும் ஒன்ருகவே இருந்தன அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/87&oldid=585581" இலிருந்து மீள்விக்கப்பட்டது