பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. உருத்திர பசுபதி நாயனர்

சோழவள நாட்டில் திருத்தலையூர் என்பது வளம் செறிந்த ஊர். மறையவர் பலர் அங்கே வாழ்ந்திருந்தனர். வேத வேள்வியை இடையருது முறைப்படி இயற்றி வந்த தல்ை மழை பொழிந்து எங்கும் வளம் பெருகியது. பூம் பொழில்கள் வானுற ஓங்கி வளர்ந்தன. அவற்றில் மலர் கள் விரிந்து தேன் நிரம்பி நின்றன. வீடு தோறும் ஆவி ன்ங்கள் மல்கின. இறைவனுக்குப் பஞ்ச கவ்வியங்களும் அளிக்கும் அவற்றைப் போற்றிப் பாதுகாத்தனர் மக்கள். அறமும் திேயும் சால்பும் அம் மக்களின் உள்ளத்தே நிரம்பியிருந்தன.

நிலத்தில் வளமும் வீட்டில் வளமும் நெஞ்சில் நற்குண கலமும் அவ்வூரில் பசுபதியார் என்ற மறையவர் வாழ்ந்து வந்தார். அவர் வேதத்தை நன்கு பயின்று சிறந்தார். சிவ பக்தி நிரம்பியவர். இறைவனுடைய பெருமையைப் பேசும் பூரீருத்திரத்தை இடைவிடாமல் பாராயணம் செய்யும் ஆர்வமுடையவராகி அப்படியே செய்து வந்தார்.

மறைகள் நான்கு ஆலுைம் நான்காவதாகிய அதர்வம் முன்னேய மூன்றனுள்ளும் இருக்கிற பிரயோகங்களைத் தொகுத்து அமைத்ததே. ஆதலின் வேதம் மூன்று என்றும் சொல்வதுண்டு. த்ரயீ என்று வடமொழியில் அதற்கு ஒரு பெயர் வழங்கும். அந்த மூன்றில் நடுநாயகமாக விளங்கு வது யஜுர் வேதம், யஜுர் வேதம் பல பகுதிகளே உடை யது. நடுப்பகுதியில் இருப்பது ரீருத்திரம். சிவபெருமா லுடைய பெருமையைச் சொல்லிப் பாராட்டும் மந்திரங்களை உடையது அது. வேதமென்னும் திருக்கோயிலில் கர்ப்பக் கிருகத்தைப் போன்றது. யஜுர் வேதம். அதன் நடுவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/88&oldid=585582" இலிருந்து மீள்விக்கப்பட்டது