பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருத்திர பசுபதி காயகுர் 83

உள்ள பீடம் போன்றது ரீருத்திரம். அதன் நடுவில் இருப்பது திருவைத்தெழுத்து. பீடத்தில் உள்ள சிவ லிங்கம் போன்றது. அது. ரீருத்திரத்தை,

'அரும றைப்பய னுகிய உருத்திரம்'

என்று சேக்கிழார் பாராட்டுவார்.

வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமும் நமச்சி வாயவே'

என்று அதிற் பொதிந்துள்ள பூரீ பஞ்சாட்சரத்தைத் திரு ஞான சம்பந்தர் வேதத்தின் மெய்ப்பொருள் என்பார்.

பஞ்சாட்சரம் சிவபெருமானுடைய அருளைப் பெறு வதற்குரிய மந்திரம். ஏழு கோடி மகாமந்திரங்களிற் சிறந்தது அது என்பர். அதனைத் தன்னிடத்தே வைத்த பெட்டியைப் போன்றது. ரீருத்திரம்; அதில் உள்ள நாயக மணி திருவைந்தெழுத்து. .

இத்தகைய சிறப்புப் பெற்ற உருத்திரத்தைச் சிவ பிரானுக்குத் திருவபிடேகம் செய்கையில் ஒதுவது வழக்கம். அம் மந்திரத்தால் பூரிக்கப் பெறும் புனல் புனிதம் அடைகிறது. . .

பசுபதியார் பூம்புனற் பொய்கை சென்று ரோடி விட்டுக் கழுத்தளவு நீரில் கின்று கொண்டு, உச்சி மேற். கரங்களைக் குவித்து, உள்ளத்தில் சிவபிரானுடைய திரு. வுருவத்தை நிறுவி, உருத்திரத்தைப் பாராயணம் செய்வார். பகல் இரவென்று பாராமல் அதை ஒதுவதையே தவமாகக் கொண்டு ஒழுகினர் அவர். புலன் நுகர்ச்சிகளில் மனம் செல்லாமல் ஒருமைப்பாட்டோடு ரீருத்திரத்தை ஒதியமை யால் அவரை உருத்திர பசுபதியார் என்றே யாவரும் வழங்கலாயினர். . . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/89&oldid=585583" இலிருந்து மீள்விக்கப்பட்டது